தமிழ்நாடு

“குடிக்கும் தண்ணீருக்கும் வரி போடும் கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு” : துரைமுருகன் சாடல்!

“பொதுமக்களுக்கு வழங்கும் குடி தண்ணீருக்கும் வரியை போடும் கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு” என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“குடிக்கும் தண்ணீருக்கும் வரி போடும் கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு” : துரைமுருகன்  சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மக்கள் கிராம சபை கூட்டம் பகுதி செயலாளர் முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “தி.மு.க ஆட்சியில் பொது மக்களின் குடிதண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் வகையில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை இப்போது உள்ள அதிமுக அரசு பணிகளை முறையாக செய்யாததால் இப்போதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

“குடிக்கும் தண்ணீருக்கும் வரி போடும் கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு” : துரைமுருகன்  சாடல்!

அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி இருந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் குழாயில் வந்து கொண்டிருக்கும். விரைவில் தி.மு.க ஆட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும். அப்போது அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடி தண்ணீர் கிடைக்கும்படி அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்படும்.

மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடி தண்ணீருக்கு இந்த அரசு மீட்டர் பொருத்தி பொதுமக்களிடையே வரி வசூலிக்க பார்க்கிறது. குடி தண்ணீருக்கு வரி போடுகின்ற ஒரு கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சி வந்தவுடன் பொருத்தப்பட்ட அனைத்து குடிதண்ணீர் மீட்டர்களையும் பிடிங்கி எறியப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories