தமிழ்நாடு

சென்னை பயங்கரம் : காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்- காதலி,அம்மாவை தீவைத்துக் கொன்று காதலன் தற்கொலை

அரசு வேலை செய்யும் மாப்பிள்ளை கிடைத்ததும் காதலனை கைவிட்டதால் காதலியையும் அம்மாவையும் தீவைத்து எரித்து காதலன் தற்கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை பயங்கரம் : காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்- காதலி,அம்மாவை தீவைத்துக் கொன்று காதலன் தற்கொலை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கொருக்குப்பேட்டையில் 7 வருடமாக காதலித்த காதலனை மணமுடிக்க மறுத்து மாநகராட்சி ஊழியரை காதலித்து நிச்சயம் செய்ததால் ஆத்திரமடைந்த காதலன், காதலி மற்றும் அவரது அம்மாவை தீ வைத்து எரித்து தானும் தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டம்மா 46 வயதான இவர் கணவரை இழந்து தனது 26 வயதுடைய மகள் ரஜிதா உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி ஊழியரான கணவர் இறந்ததால் அவருடைய பணி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மகள் ரஜிதாவிற்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ரஜிதா தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற 32 வயது இளைஞர் கடந்த 7 வருடங்களாக காதலித்ததோடு ரஜிதாவை கோவிலில் திருமணம் முடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உடன் பணிபுரியும் மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் ரஜிதாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டில் கூறியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் சதீஷ் ரஜிதாவிற்கு வாட்ஸ்அப் மூலம் உரையாடி தன்னை ஏற்றுக்கொள்ளும் படி வற்புறுத்தியள்ளார். இது குறித்து வெங்கட்டம்மா சதீஷை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் கேனுடன் ரஜிதாவின் வீட்டிற்கு சென்று ஓட்டை பிரித்து உள்ளே குதித்து தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாலையில் ரஜிதாவின் வீட்டில் இருந்து புகை வெளியே வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது 3 பேர் உடல் கருகி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.நகர் போலிஸார் தீயில் கருகிய மூன்று பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் 7 வருடமாக காதலித்து விட்டு கடைசியில் ஒரு வருடத்தில் உடன் பணியாற்றும் மாநகராட்சி பணியாளருடன் பழக்கம் ஏற்பட்டு காதலனை கைவிட்டதால் காதலன் தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories