தமிழ்நாடு

“நமது விவசாயிகளின் தீவிர போராட்டம் மோடியை வெளியே வரவிடாது செய்துள்ளது” - திருப்பூரில் ராகுல்காந்தி பேச்சு

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி மருத்துவம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் இருவகையான இந்தியாவாக இருப்பதில் விருப்பமில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“நமது விவசாயிகளின் தீவிர போராட்டம் மோடியை வெளியே வரவிடாது செய்துள்ளது” - திருப்பூரில் ராகுல்காந்தி பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏழைகளின் சக்தியை மத்திய அரசு உணராமல் உள்ளதாகவும் ஆனால் தற்போது அந்த சக்தியை உணர்த்தும் வகையில் விவசாயிகள் மோடியை வெளியே வர முடியாத அளவு செய்து இருப்பதாக, திருப்பூரில் தொழிலாளர்கள் மத்தியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணமாக தமிழகத்தின் கொங்கு மண்டலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் பல்லடம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

தொழிலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக அனைத்து வகை ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் என்பதை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் அவை நிறைவேற்றப்படும். அதேபோல ஏழ்மை குடும்பங்கள் ஒவ்வொன்றும் 72,000 பெறுவதை உறுதி செய்வோம் எனவும் தெரிவித்தார். மேலும் பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி என்பது திட்டமிட்டு தொழிலாளர்களின் சிறு குறு தொழில்களையும் முடக்குவதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் இதனை ஊடகங்கள் ஆதரிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒரு சில ஊடகங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். ஏழைகளின் சக்தியை மத்திய அரசு உணராமல் உள்ளதாகவும் ஆனால் தற்போது அந்த சக்தியை உணர்த்தும் வகையில் விவசாயிகள் மோடியை வெளியே வர முடியாத அளவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு பணக்காரர்களுக்கு வழங்கும் கடனை தள்ளுபடி செய்வது போல் ஏன் ஏழைகளுக்கு வழங்கும் கடனை தள்ளுபடி செய்வது இல்லை எனவும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி மருத்துவம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் இருவகையான இந்தியாவாக இருப்பதில் விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.

வங்கிகளிலிருந்து ஏழைகளுக்கும் சிறு குறு தொழில் புரிவோருக்கு உதவிகள் கிடைத்திட வேண்டுமெனவும் தெரிவித்தார் . காங்கிரஸ் கட்சியின் நோக்கம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதும் வறுமையை ஒழிப்பதே என்றும் தெரிவித்தார். மத்தியில் ஆளுகின்ற அரசு மொழிவாரியாக மதவாரியாகவும் பிரித்தாளும் ஆனால் எங்களின் நோக்கம் அனைத்தையும் ஒருங்கிணைப்பது என தெரிவித்தார். ஒரு நாட்டின் தலைவர் என்பவர் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் அகம்பாவம் கொண்டவராக செயல்பட்டால் நாடு எப்படி வளர்ச்சியடையும் எனவும் பேசினார். .நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

banner

Related Stories

Related Stories