தமிழ்நாடு

“25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்த அவலம்” : அ.தி.மு.க அரசின் ஊழல் அம்பலம்?

“25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்த அவலம்” : அ.தி.மு.க அரசின் ஊழல் அம்பலம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கடலூர் மாவட்டம் திரிமங்களம் இடையே ரூ.25,35,00,000 மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.

கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20-12-20 ஆம் தேதி தளவானூர் தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற விழாவில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று தடுப்பணையை திறந்து வைத்தார்.

இந்த தடுப்பணை 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்டது. இத்தடுப்பணை மூலம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் 4,150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

“25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்த அவலம்” : அ.தி.மு.க அரசின் ஊழல் அம்பலம்?
Vignesh

தடுப்பணை திறக்கப்பட்டு ஒரு மாதங்களே நிலையில், அதன் கரைப்பகுதி உடைந்து தற்போது ஐதண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையை வலுப்படுத்தம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு மாதங்களே ஆன நிலையில் அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெளியேறி வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரமற்ற நிலையில் கட்டப்பட்டதே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க துணை பொதுச்செயலாளர் பொன்முடி இரவு என்று பாராமல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டத்துறை அமைச்சர் திறந்து வைக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இந்த தடுப்பணை உடைந்து இருப்பது அ.தி.மு.க அரசின் . இதற்கு அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பகுதி மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

“25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்த அவலம்” : அ.தி.மு.க அரசின் ஊழல் அம்பலம்?
DIGI TEAM 1

தமிழகம் முழுவதும் இது போன்று 60 முதல் 70 சதவீதம் வரை கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு பல்வேறு இடங்களில் தரமற்ற முறையில் டெண்டர் விடப்பட்டு தரமற்ற முறையில் கட்டிடங்கள் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது.

இன்னும் மூன்று மாத ஆட்சிக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வரும்போது இது பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

banner

Related Stories

Related Stories