தமிழ்நாடு

#TnElections2021 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண் வாக்காளர்கள்!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநில தலைமை தேர்தல் ஆணையர்.

  #TnElections2021 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண் வாக்காளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆகும். அதில், ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேரும், பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727, 18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்கள் 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேரும் உள்ளனர்.

  #TnElections2021 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண் வாக்காளர்கள்!

அடுத்தபடியாக, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,246 ஆக இருக்கிறது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 பேர் உள்ளனர். அதில், ஆண்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 581 பேரும், பெண்கள் 20 லட்சத்து 60 ஆயிரத்து 698 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 1,081 பேரும் உள்ளனர்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 16-11-2020 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 1 லட்சத்து 16 ஆயிரத்து 656 கூடுதலாக உள்ளது. இந்த எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களைவிட 2.96 சதவீதம் கூடுதலாக உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். மேலும் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட அவர்களில் 18 வயது பூர்த்தி அடைந்த அவர்களின் மொத்த எண்ணிக்கை 64,152 எனவும் தெரிவித்தார்.

  #TnElections2021 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண் வாக்காளர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் (சென்னை) ஆகும். சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 பேர். அதுபோல, மாநிலத்திலேயே குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் உள்ளது. அங்கு, 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு இறப்பு, இடமாற்றம் இரட்டைப்பதிவு மூலம் தமிழகத்தில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 314 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் செய்த வாக்காளர்களாக 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்

  #TnElections2021 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண் வாக்காளர்கள்!
  #TnElections2021 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண் வாக்காளர்கள்!
  #TnElections2021 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண் வாக்காளர்கள்!
banner

Related Stories

Related Stories