தமிழ்நாடு

“காது கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடும் உதகை யானை” : வலி காரணமாக நீரில் தஞ்சமடைந்த சோகம்!

உதகை அருகே மசினகுடி பகுதியில் முதுகில் ஏற்பட்ட காயைத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானையின் காது கிழிந்து ரத்தம் கொட்டும் நிலையில், உயிருக்கு போராடி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

“காது கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடும் உதகை யானை” : வலி காரணமாக நீரில் தஞ்சமடைந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து செல்லும் யானைகள் பல்வேறு விபத்துகளில் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகிறது.

குறிப்பாக, யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் கோவையில் மின் வேலியில் சிக்கி ஒருயானை உயிரிழந்த நிலையில், உதகை அருகே மசினகுடி பகுதியில் முதுகில் ஏற்பட்ட காயைத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானையின் காது கிழிந்து ரத்தம் கொட்டுவதுடன் காதின் சில பகுதிகள் துண்டாகி கிழே விழந்த நிலையில் உயிருக்கு போராடி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

“காது கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடும் உதகை யானை” : வலி காரணமாக நீரில் தஞ்சமடைந்த சோகம்!

உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 40 வயது மதிக்கதக்க காட்டு யானை கடந்த 10 ஆண்டுகளாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு கடந்த மாதம் 28-ந்தேதி கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டது.

முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்த பின்னரும் அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதுடன் சாலைகளில் நிற்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. இன்று காலை மசினகுடி - சிங்காரா சாலையில் நின்ற இந்த யானையால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

காலையில் நன்றாக இருந்த அந்த யானையை சில மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் அந்த யானையின் இடது காது கிழிந்ததுடன் சில காது பகுதிகளும் துண்டாகி கிழே விழுந்துள்ளது. காது கிழிந்ததால் 3 மணி நேரத்திற்கு மேலாக கடும் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.

முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தும் ஏற்கனவே சோர்வுடன் காணபட்ட யானைக்கு தற்போது காது கிழிந்து தொடர்ந்து ரத்தம் கொட்டுவதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

ஆனால் முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் இது வரை அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக மருத்துவ சிகிச்சை அளித்து ரத்த போக்கை நிறுத்தி யானையை காப்பாற்ற தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

எனவே உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வலியில் தவிக்கும் யானை, வலி காரணமாக ஆற்றில் உள்ள நீர் நிலைக்கு சென்று தண்ணீரீல் நின்றி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மோதிய யானை, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories