தமிழ்நாடு

“பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற இளைஞரை குத்திக்கொலை செய்த இளம்பெண்” : சோழவரம் காவல் நிலையத்தில் சரண்!

திருவள்ளூர் அருகே சோழவரத்தில் தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்து விட்டு இளம்பெண் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

“பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற இளைஞரை குத்திக்கொலை செய்த இளம்பெண்” : சோழவரம் காவல் நிலையத்தில் சரண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் கௌதமி. இவர் நேற்றிரவு 11 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள முட்புதர் காடு பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25) என்பவரை சென்றுள்ளார். அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவரை பின் தொடர்ந்து சென்ற அஜித் கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயன்றுள்ளார்.

தன்னை விட்டுவிடும்படி கௌதமி கையெடுத்து கும்பிடு கேட்டுள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாது பாலியல் வன்கொடுமைக்கு அஜித்குமார் முயன்றுள்ளார். அப்போது அஜித் கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கிய கௌதமி அஜித்குமாரை சரமாரியாக வெட்டினார்.

“பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற இளைஞரை குத்திக்கொலை செய்த இளம்பெண்” : சோழவரம் காவல் நிலையத்தில் சரண்!

இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கௌதமி சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, அங்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்த போலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். உறவுக்காரப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளம் பெண் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories