தமிழ்நாடு

மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தவிடாமல் அடக்குமுறையை கையாளும் போலிஸாரை எதிர்த்து தி.மு.க போராட்டம்!

கோவையில் தி.மு.க சார்பில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினரை கண்டித்து பேரணி நடைபெற்றது.

மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தவிடாமல் அடக்குமுறையை கையாளும் போலிஸாரை எதிர்த்து தி.மு.க போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவையில் தி.மு.க சார்பில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினரை கண்டித்து தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் பேரணி மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் ‘அ.தி.மு.க-வை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டங்களை தி.மு.க நடத்தி வருகிறது. இக்கூட்டத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் காவல்துறையினர், கூட்டத்திற்கு முன்பாகவும், கூட்டம் நடைபெறும் சூழலிலும் தி.மு.க-வினரை கைது செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க அரசுக்கு ஏவல்துறையாகச் செயல்படும் காவல்துறையை எதிர்த்தும், அடக்குமுறையைக் கையாளும் அரசை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் தி.மு.க -வினர் இன்று கோவை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். தி.மு.க-வின் பேரணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காலை முதலே கோவை மாவட்ட, மாநகர் எல்லைகளில் போலிஸார் அணிவகுத்து நின்று அப்பகுதி வழியே வரக்கூடிய தி.மு.க-வினரை தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். அதையும் மீறி திட்டமிட்டபடி தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட தி.மு.க -வின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கோவையில் தி.மு.க-வின் மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரின் அடக்குமுறையை எதிர்த்தும் ஊழல் குறித்தும் கோஷமிட்டனர். இதையடுத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories