தமிழ்நாடு

மது குடிக்க பணம் தராததால் தந்தை வெட்டிக் கொலை.. விழுப்புரம் அருகே கோரச் சம்பவம்.. வளர்ப்பு மகனுக்கு வலை!

குடிக்க பணம் கேட்டு கொடுக்க மறுத்ததால் தந்தையை அரிவாள்மனையால் வெட்டிக் கொலை செய்த மகன்.

மது குடிக்க பணம் தராததால் தந்தை வெட்டிக் கொலை.. விழுப்புரம் அருகே கோரச் சம்பவம்.. வளர்ப்பு மகனுக்கு வலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர்- ஏ.குமாரமங்கலம் ஆகிய கிராமங்களின் எல்லை பகுதியில் அரசு மறுவாழ்வு இல்லம் உள்ளது. இந்த அரசு மறுவாழ்வு இல்லத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட பாலுச்சாமி (60) என்பவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பாலுச்சாமி, அவரது மனைவி வெள்ளையம்மாள் (55) மற்றும் வளர்ப்பு மகன் விஜயராம் (36) ஆகிய மூன்று நபர்களும் அரசு மறுவாழ்வு இல்லத்தில் அருகே குமாரமங்கலம் கிராம எல்லையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தனியாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

விஜயராம் கறி கோழிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு தாய் தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு கொடுக்க மறுத்ததால் வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் தந்தை பாலுச்சாமியை விஜயராம் கொடூரமாக வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயத்துக்குள்ளான தாய் வெள்ளையம்மாளுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மது குடிக்க பணம் தராததால் தந்தை வெட்டிக் கொலை.. விழுப்புரம் அருகே கோரச் சம்பவம்.. வளர்ப்பு மகனுக்கு வலை!

இந்த சம்பவம் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலையாளியை பிடிப்பதற்கு போலிஸார் விசாரணை மேற்கொண்டபோது கொலை செய்யப்பட்ட பாலுசாமி சொந்த ஊரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் பாலுச்சாமி என்றும் கொலை செய்த வளர்ப்பு மகன் விஜயராம் ஒரு வயது குழந்தையாக இருந்த போது, வெள்ளையம்மாள் சொந்த கணவரை விட்டுவிட்டு பாலுச்சாமியுடன் கைக்குழந்தையுடன் வந்துவிட்டதாகவும் தெரிகிறது. உளுந்தூர்பேட்டை போலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து கொலை செய்த வளர்ப்பு மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories