தமிழ்நாடு

“தமிழகத்தில் பா.ஜ.க கால் அல்ல, கை கூட எங்கையும் ஊன்ற முடியாது”: காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் சாடல்!

“வட மாநிலத்தில் வேண்டுமானால் கால் பதிக்கலாம்; ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க-வால் கால் அல்ல, கை கூட எங்கையும் ஊன்ற முடியாது” என காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் பா.ஜ.க கால் அல்ல, கை கூட எங்கையும் ஊன்ற முடியாது”: காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

இதனையடுத்து இன்று காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள மகாத்மா காந்தி, காமராஜர், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைகளுக்கும், பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலித்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில், “தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கடுமையான வன்முறை கலாச்சாரத்தை, ஓர் மத தூவேசத்தை தூண்டலாம் என்ற எண்ணத்தில் தான் அவர்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

“தமிழகத்தில் பா.ஜ.க கால் அல்ல, கை கூட எங்கையும் ஊன்ற முடியாது”: காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் சாடல்!

ஆர்.எஸ்.எஸ்யின் தலைவர் மோகன் பகவத், பா.ஜ.க தலைவர் எல்லாம் ஒன்று கூடி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற ஊழியர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் வன்முறை, மதக்கலவரம், சாதி சண்டையை உருவாக்க இருக்கிறார்கள்.

பா.ஜ.க வட மாநிலத்தில் வேண்டுமானால் கால் பதித்து இருக்கலாம், தடம் பதித்து இருக்கலாம், வெற்றிகளை ருசித்து இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க வாங்கப்போவது பூஜ்ஜியம் மட்டுமே தான்.

பா.ஜ.க கால் அல்ல, கை கூட எங்கையும் ஊன்ற முடியாது. அதற்கு காரணம் தமிழகம் திராவிட இயக்கத்துடைய வலுவான பூமி. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் போன்றவர்கள் எல்லாம் உருவாக்கிய மாநிலம் இது. ஆகையால் இந்த மாநிலத்தில் பா.ஜ.கவின் கனவு பழிக்காது.

“தமிழகத்தில் பா.ஜ.க கால் அல்ல, கை கூட எங்கையும் ஊன்ற முடியாது”: காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் சாடல்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெற போகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஒன்றாக சேர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சராக அரியணை ஏற்றுவார்கள், அது உறுதி.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இந்து வெறியர்களும் நடத்துகின்ற மதக்கலவரங்கள் தமிழகத்தில் எடுபடாது” என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் அருண், நாதன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories