தமிழ்நாடு

“எதிர்க்கட்சியினரை அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” - எடப்பாடி அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை!

ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி மீது அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“எதிர்க்கட்சியினரை அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” - எடப்பாடி அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

தனக்கெதிரான இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

“எதிர்க்கட்சியினரை அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” - எடப்பாடி அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை!

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் பொதுமக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் எதிர்கட்சிகளுக்கு எதிராக ஆளுங்கட்சியினர் அவதூறாக பேசி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories