தமிழ்நாடு

“மழுப்பாமல் பதில் கூறுங்கள்” - அரசு அதிகாரிகளுக்கு பொதுக் கணக்குக் குழு தலைவர் துரைமுருகன் அறிவுறுத்தல்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

“மழுப்பாமல் பதில் கூறுங்கள்” - அரசு அதிகாரிகளுக்கு பொதுக் கணக்குக் குழு தலைவர் துரைமுருகன் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழுவினர், குழுத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ தலைமையில் அரசின் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய திருச்சி மாவட்டத்துக்கு இன்று வருகை தந்துள்ளன.

இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து துரைமுருகன் எம்.எல்.ஏ பேசினார்.

அப்போது பேசிய அவர், “எந்தக் குழுவுக்கும் இல்லாத அதிகாரம் பொதுக் கணக்குக் குழுவுக்கு உண்டு. எந்தத் துறையின் அதிகாரிக்கும் சம்மன் அனுப்பும் அதிகாரம், தவறு செய்யும் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்யும் அதிகாரம், அரசு அதிகாரியின் பதவி உயர்வை ரத்து செய்யும் அதிகாரம், அவர்களைச் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் ஆகியவை இந்தக் குழுவுக்கு இருக்கிறது.

செயலாளர் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் தெரிந்தால் பதில் கூறுங்கள். இல்லையெனில், தெரியாது என்று கூறிவிடுங்கள். மழுப்பலாக எதுவும் கூறி மாட்டிக்கொள்ள வேண்டாம்.

எனது அரசியல் வாழ்வில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளேன். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்துள்ளேன். 14 ஆண்டு காலம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது யாரையும் பணியிடை நீக்கம் செய்தது கிடையாது. எனவே, நாங்கள் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் நேர்மையாக பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories