தமிழ்நாடு

“மு.க.ஸ்டாலின் முதல்வராவதை போலி விவசாயி உட்பட யாராலும் தடுக்க முடியாது” - கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு!

நீட் தேர்வால் மருத்துவக் கனவை தமிழக மாணவ மாணவியர்கள் இழந்திருப்பதாகவும், வட இந்தியர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருவதாகவும் கார்த்திகேய சிவசேனாபதி குற்றச்சாட்டு.

“மு.க.ஸ்டாலின் முதல்வராவதை போலி விவசாயி உட்பட யாராலும் தடுக்க முடியாது” - கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டம் திருப்பூர் மத்திய மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. அதில், மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேயன் சிவசேனாபதி பங்கேற்று 200க்கும் மேற்பட்ட மகளிருடன் உரையாடினார்.

முன்னதாக பேசிய திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ், அ.தி.மு.க ஆட்சியில் திருப்பூர் தொழில் மாநகரம் சீரழிந்துவிட்டதாகவும் மக்கள் பணிகள் முழுவதும் கைவிடப்பட்டு கொள்ளையடிப்பதை மட்டுமே ஆட்சியாளர்களும் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளும் செய்து வருவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தார்

பின்னர் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி என முதல்வரும், அமைச்சர்களும் கூட்டமாக இணைந்து மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சியில் வெளிவரும் தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்கும் வகையில் ஆரியக் கூட்டம் உலவுவதாகவும் அதற்கு மத்திய அரசு துணை போவதாகவும் குற்றம்சாட்டினார்.

“மு.க.ஸ்டாலின் முதல்வராவதை போலி விவசாயி உட்பட யாராலும் தடுக்க முடியாது” - கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு!

மேலும் பேசிய அவர், 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஜார்ஜ் கோட்டையில் அமரப் போகிறார். தற்போது முதலமைச்சர் போர்வையில் இருக்கும் இந்தப் போலி விவசாயியாலோ, ஆன்மீக அரசியலாலோ, நரேந்திர மோடியாலோ, யாராலும் இதை தடுக்க முடியாது. 2021ஆம் ஆண்டு நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்காகவும் இயங்குகின்ற ஒரு இயக்கம். மருத்துவப் படிப்பை நீட் தேர்வினால் தமிழகம் இழந்திருக்கிறது. தற்போது தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் நாம் கட்டுகிற வரிப்பணத்தில் வட இந்தியர்கள் படித்து வருகின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தற்போது தமிழகத்தில் 15 குழுக்களாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், போலி விவசாயியான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் மக்கள் சந்திக்கின்ற இன்னல்களை எல்லாம் மக்களோடு மக்களாக இருந்து கேட்டறிந்து, தமிழக மக்கள் படும் இன்னல்களை தீர்க்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து அதனை அறிக்கையாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்களின் இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories