தமிழ்நாடு

“பல துறைகளை தன் வசம் வைத்திருந்தும் மெத்தனமாக செயல்படும் எடப்பாடி” - துரைமுருகன் சாடல்!

நிவர் புயல் வருவதற்கு முன்னரே தி.மு.க சார்பில் மோர்தானா அணையின் கால்வாய்களை தூர்வார வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் அது கண்டுகொள்ளப்படவில்லை.

“பல துறைகளை தன் வசம் வைத்திருந்தும் மெத்தனமாக செயல்படும் எடப்பாடி” - துரைமுருகன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மழைகாலத்திற்கு முன்னரே மோர்தானா அணை கால்வாய்களை அரசு செப்பனிட்டிருக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால் அணை நிரம்பியும் நீர் வீணாகிறது. தமிழக முதல்வர் பல துறைகளை வைத்திருப்பதால் செயல்பாட்டில் தொய்வு என எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள மோர்தானா அணையை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அணையின் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளது. இதனை பார்த்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மோர்தானா அணை புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது. மதகுகள் இல்லாமல் கால்வாய்கள் அமைக்கப்பட்டு அந்தக் கால்வாய்களில் தண்ணீர் திறந்தால் ஏரிகளுக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

“பல துறைகளை தன் வசம் வைத்திருந்தும் மெத்தனமாக செயல்படும் எடப்பாடி” - துரைமுருகன் சாடல்!

இந்த அணை கட்டி முடித்த பின்னர் கட்டப்பட்ட அனைத்து அணைகளும் தமிழகத்தில் இதே மாதிரியில் கட்டப்பட்டன. தற்போது நிவர் புயல் வருவதற்கு முன்னரே தி.மு.க சார்பில் மோர்தானா அணையின் கால்வாய்களை தூர்வார வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் அது கண்டுகொள்ளப்படவில்லை. குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளும் முறையாக கையாளப்படவில்லை. அணைகளும் பராமரிக்கப்படவில்லை.

தற்போது இந்த அணை முழுவதுமாக நிரம்பி நீர் வீணாக வெளியேறுகிறது. நீர் நிரம்பியதும் வலதுபுறம் இடதுபுறக் கால்வாய்களை மாவட்ட நிர்வாகம் தண்ணீர் திறந்து வேலூர் ஓட்டேரி வரையிலும் அந்தப் பகுதியில் காட்பாடி வரை உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரம்பியிருக்கும். நேற்றுத் தான் தண்ணீரை திறந்தார்கள். இது மெத்தனத்திற்குரியது. மோர்தானா சாலைகளையும் அதிகாரிகள் செப்பனிடவில்லை. ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பவில்லை. தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நெல், வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களுமே சேதமடைந்தது. ஆனால் இதுவரையில் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. தமிழக முதல்வர் தனது கைவசம் பலதுறைகளை வைத்துள்ளார்.

இவ்வாறு இருப்பதால் அவரின் துறைகளில் அதிக கவனம் செலுத்த முடியாது. அதனால்தான் தற்போது பொதுப்பணித்துறையை செயல்படுத்த முடியவில்லை. தஞ்சை மாவட்டத்திலும் கால்வாய்களை சுத்தப்படுத்தவில்லை. குடிமராமத்து பணியை இவர்கள் தமிழகத்தில் சரியாகச் செய்யவில்லை. கிடைக்கும் மழைநீரையும் வீணாக்கிவிடுகிறார்கள் என்று துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories