தமிழ்நாடு

“வேல் யாத்திரையில் குத்துப்பாட்டுக்கு சினிமா டான்ஸர்களை ஆடவைத்த பா.ஜ.க” : முகம் சுளித்த முருக பக்தர்கள் !

திருவண்ணாமலையில் பா.ஜ.கவின் வேல்யாத்திரை துவங்கும் போது, குத்துப்பாட்டுக்கு சினிமா டான்ஸர்களை ஆடவைத்த சம்பவம் முருக பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வேல் யாத்திரையில் குத்துப்பாட்டுக்கு சினிமா டான்ஸர்களை ஆடவைத்த பா.ஜ.க” : முகம் சுளித்த முருக பக்தர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் பா.ஜ.க சார்பில், “வெற்றிவேல் யாத்திரை” என்ற பெயரில் ஒரு பயணத்தை பா.ஜ.கவினர் தொடங்கியுள்ளனர். தனது அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி, வடக்கே ராமர் என கிளம்பும் பா.ஜ.க, தமிழகத்தில் முருகர் என்று கிளம்பியிருக்கிறது.

தமிழ்க் கடவுளாம் முருகரின் பெயரைச் சொல்லி, தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, பா.ஜ.க-வின் யாத்திரை முடிவடையும் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அந்த நாளைத் தேர்வு செய்திருப்பதிலும் உள்நோக்கம் இருக்கும் என அரசியல் கட்சியினர் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, பா.ஜ.க வட இந்தியாவில் ராமர் பெயரில் நடத்திய ரத யாத்திரை வன்முறைகளாக மாறியதோ அதேப்போன்று தமிழகத்தில் சாதி, மத மோதலை உருவாக்கி வன்முறையை மாற்ற நினைக்கிறார்கள் என்றும் தேர்தல் நேரத்தில் வேல் யாத்திரை என்கிற பெயரில் மோதலை ஏற்படுத்தி ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என்றும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

“வேல் யாத்திரையில் குத்துப்பாட்டுக்கு சினிமா டான்ஸர்களை ஆடவைத்த பா.ஜ.க” : முகம் சுளித்த முருக பக்தர்கள் !

இந்நிலையில், நவம்பர் 6 ல் துவக்கி டிசம்பர் 6-ல் முடிக்கப் போவதாக அறிவித்துள்ள இந்த யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் அனுமதியின்றி யாத்திரையை பா.ஜ.கவினர் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

தொண்டர்களே இல்லாத கட்சிக்கு கூட்டம் திரட்டுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். யாத்திரைக்கு மக்கள் கூட்டத்தை திரட்டுவதற்கான பல்வேறு குறுக்குவழி நடவடிக்கைகளை பா.ஜ.கவினர் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது கூட்டத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து வயதானவர்களிடம் பேசி, ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் பணம், பிரியாணி, புடவை ஆகியவை தருவோம் என ஆசைகாட்டி ஏமாற்றி அழைத்து வந்துள்ளனர்.

“வேல் யாத்திரையில் குத்துப்பாட்டுக்கு சினிமா டான்ஸர்களை ஆடவைத்த பா.ஜ.க” : முகம் சுளித்த முருக பக்தர்கள் !

சில இடங்களில், வேல் யாத்திரை கூட்டம் முடிந்ததும் போலிஸ் கைது செய்ய முயல்கையில், ‘கூட்டத்துல கலந்துக்கிட்டா பிரியாணி, பணம் வாங்கித் தருவோம்னாங்க.. அதனாலதான் வந்தோம்’ என கெஞ்சியுள்ளனர். இதைக் கேட்ட போலிஸார் திகைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது திருவண்ணாமலை நகரில் வேல்யாத்திரை துவங்கும் போது, கூட்டத்தை திரட்டுவதற்கான, சென்னையில் இருந்து சினிமாவில் பாடல்களுக்கு நடனமாடும் இளம் பெண் டான்ஸர்களையும், ஆண் டான்ஸர்களையும் அழைத்து வந்து, வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் சாலையில் ஆடவைத்துள்ளனர்.

“வேல் யாத்திரையில் குத்துப்பாட்டுக்கு சினிமா டான்ஸர்களை ஆடவைத்த பா.ஜ.க” : முகம் சுளித்த முருக பக்தர்கள் !

அப்போது சென்டை மேளத்தின் அடிகளுக்கு ஏற்பட குத்துப்பாடல் நடனம் ஆடியதும், அங்கு வந்த அசல் முருக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், முக சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஒரு முருக பக்தராக காட்டிக்கொள்ளும் பா.ஜ.க தலைவர் முருகன் இதுபோல செய்வது மூலம் முருக பக்தர் போல் நாடகம் ஆடுகிறார் என முருக பக்தர்களே விமர்த்தி வருகின்றனர்.

மேலும் யாத்திரையில் கலந்துக்கொண்ட பலர் குடிபோதையில், காலில் செருப்புடன் முருகனின் வேலை தூக்கிக்கொண்டிருந்தது கூடியிருந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories