தமிழ்நாடு

“பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி” : கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் !

கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி” : கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ மகன் கிருஷ்ணசாமி (34) இளங்கோ அரிசி கடை வைத்துள்ளார். இந்நிலையில், இளங்கோ தீபாவளிக்காக தனது கடையில் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவளியன்று கிருஷ்ணசாமியின் ஒன்றை வயது மகன் தர்ஷித் பக்கத்து வீட்டுக்காரரனா பழனிவேல் மகள்கள் நிவேதா(7) வர்ஷா(6) ஆகிய மூவரும் கடைக்கு அருகில் விளையாடி இருக்கின்றனர்.

இந்த நிலையில், அப்போது யாரோ அந்த தெருவில் பட்டாசு வெடித்ததில் பொறி ஒன்று எதிர்பாராதவிதமாக கிருஷ்ணசாமி பட்டாசு கடையில் விழந்துள்ளது. இதில் பட்டாசு முழுதும் வெடித்து சிதறியதால் அருகிலிருந்த தர்ஷித், நிவேதா, வர்ஷா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

“பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி” : கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் !

அவர்களை மூவரும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மேல் சிகிச்சைக்காக நிவேதாவும், வர்ஷாவும் சேலம் செல்ல தர்ஷித் மட்டும் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது தர்ஷித் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தர்ஷித் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். மேலும் தீபாவளி அன்று மூன்று குழந்தைகள்கள் தீக்காயங்கள் ஏற்பட்டு அதில் தர்ஷித் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதில் நிவேதாவும், வர்ஷாவும் சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து வரஞ்சரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories