தமிழ்நாடு

துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த அமைச்சர்களிடமும் எவ்வளவு இருக்கும்?: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த அடிமைகளிடமும் எவ்வளவு இருக்கும் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த அமைச்சர்களிடமும் எவ்வளவு இருக்கும்?: உதயநிதி ஸ்டாலின் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு மரணமடையும் தருணத்திலும், அவர் ஆட்சிக் காலத்தில் பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே அ.தி.மு.க ஆட்சியாளர்கள் குறியாக இருந்திருக்கிறார்கள் என பத்திரிகைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன.

இதனையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மறைந்த அமைச்சர் தொடர்புடைய இடங்களிலேயே மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு 300 கோடி ரூபாய் முதல் 800 கோடி வரை இருக்கும்.

மேலும் மிகப்பெரிய தொகை பதுக்கப்பட்டு அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால், ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திகளான அடாவடி வசூல் அமைச்சர்கள் வழியாக எவ்வளவு பெருந்தொகை பதுக்கப்பட்டு இருக்கிறது? எதிர்க்கட்சிகளை ஏகடியம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் தன் ஆட்சியின் ‘மாட்சி’ பற்றி வாய் திறப்பாரா? அவருக்குத் துதி பாடி, சிதறி விழும் ‘பரிசில்’ பெறும் சிறு கூட்டத்தார் கருத்து தெரிவிப்பார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த அமைச்சர்களிடமும் எவ்வளவு இருக்கும்?: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

இந்நிலையில், மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த அடிமைகளிடமும் எவ்வளவு இருக்கும் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் தரப்பட்ட ஊழல் பணத்தை வசூலிக்க, ‘பணத்தைக்கொடு-உடலை எடு’ என அவரின் குடும்பத்தை நெருக்கியதாக செய்திகள் வருகின்றன. துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த அடிமைகளிடமும் எவ்வளவு இருக்கும்? அசாதாரணங்கள் அடிமைகள் ஆட்சியில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

அடிமைகளை மேலும் அடிமைகளாக்க தமிழகத்தை ஓவர்டைம் எடுத்து கவனிக்கும் இன்கம்டாக்ஸ், சிபிஐ... போன்றவை இவ்விஷயத்தில் மயான அமைதி காக்கின்றன. ஆர்.கே நகர் தேர்தல் பணப்பட்டுவாடா பட்டியலில் முதல்வர் உட்பட அமைச்சர்களின் பெயர் ஆதாரங்களுடன் கிடைத்தும் அவ்வழக்கு என்னானது என இதுவரை தெரியவில்லை.

மக்கள், சட்டம், ஜனநாயகம், ஊடகம் இப்படி எதன்மீதும் அடிமைகளுக்கு மரியாதையோ, பயமோ இல்லை என்பதற்கு துரைக்கண்ணு விவகாரம் மேலும் ஒரு சான்று. கொள்ளை பணத்தின் ஒரு பகுதியை தமிழகம் முழுவதும் பிரித்தளித்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என அடிமைகள் நினைக்கின்றனர். ஆனால் அது இம்முறை நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.“மரணக்குழியிலும் ஊழல் நாற்றமா? - அதிமுக கும்பலின் மோசடிக்குத் துணை போகிறதா பாஜக அரசு?” : மு.க.ஸ்டாலின்!

banner

Related Stories

Related Stories