புதிதாக 79 ஆயிரத்து 328 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2,341 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரையில் தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 41 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில், 7 லட்சத்து 11 ஆயிரத்து 198 பேர் குணமடைந்தும், 11 ஆயிரத்து 324 பேர் பலியாகியிருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,341 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் 603, கோவையில் 213, திருவள்ளூரில் 137, திருப்பூரில் 114, செங்கல்பட்டில் 112, ஈரோட்டில் 108, சேலத்தில் 106 என பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் 2,352 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்கள். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 25 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து தற்போது 18 ஆயிரத்து 966 பேருக்கு வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.