தமிழ்நாடு

போலி முகநூல் கணக்குகள் உருவாக்கி அவதூறு - தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியினர் காவல்துறையில் புகார்!

தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கி அதில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் பதிவிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கி அதில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் பதிவிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ கடந்த நவம்பர் 2ம் தேதி தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அதேபோன்ற பதிவை தீய உள்நோக்கத்துடன் சட்டவிரோதமாக இந்துசமய நெறியாளர் என்கிற முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் சில பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது.

இது பொதுமக்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கி பல சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் என்பதால் இந்த முகநூல் கணக்கை உருவாக்கிய நபர் மீதும் அதில் கருத்துகளை பதிவு செய்த நபர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியினர் புகார் அளித்துள்ளனர்.

தி.மு.க மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் திமுகவினர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா அவர்களிடம் மனு அளித்தனர்.

banner

Related Stories

Related Stories