தமிழ்நாடு

நீட் தேர்வில் வென்றும் கல்லூரி சேரமுடியாமல் தவித்த ஏழை மாணவன்.. நிதி உதவி அளித்த உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வில் வென்றும் கல்லூரி சேரமுடியாமல் தவித்த ஏழை மாணவன் சுஜித்குமாருக்கு, நிதியுதவியாக ரூ.4 லட்சத்தை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நீட் தேர்வில் வென்றும் கல்லூரி சேரமுடியாமல் தவித்த ஏழை மாணவன்.. நிதி உதவி அளித்த உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும். எனவே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அதனைக் காதில் வாங்கிகொள்ளாத மத்திய மாநில அரசால் தேர்ச்சி பெற்றும் பல மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேப்போல், மாணவன் சுஜித்குமாருக்கும், அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிட்டியும், வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த, முத்துநாயக்கன்பட்டி, மரத்துக்குட்டையை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் சுஜித்குமார். இவர், அவரது தந்தையுடன் தேங்காய் நார் மில்லில் வேலை பார்த்தபடியே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று எழுதினார். தேர்வில், 720க்கு, 635 மதிப்பெண் பெற்றார்.

நீட் தேர்வில் வென்றும் கல்லூரி சேரமுடியாமல் தவித்த ஏழை மாணவன்.. நிதி உதவி அளித்த உதயநிதி ஸ்டாலின்!

அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியிலேயே படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், குடும்ப வறுமை காரணமாக கல்லூரிக்கு செலுத்த வேண்டிய பணத்தை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல மதிப்பெண்கள் பெற்றும் வறுமை காரணமாக வாய்ப்பு கிடைத்தும் படிக்க முடியாமல் தவித்த மாணவரின் வறுமை நிலையை உணர்ந்து சேலம் மாவட்ட தி.மு.க-வினர், மாணவரின் படிப்புக்காக நிதியுதவி அளிக்க முன்வந்தனர்.

முன்னதாக சேலம் மாவட்ட எம்.பி., பார்த்திபன், மாணவரின் வீட்டுக்கு சென்று அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் சுஜித்குமாரின் மருத்துவ படிப்புக்காக ரூ.4 லட்சத்தை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற சேலம்-ஓமலூர்-முத்துநாயக்கன்பட்டி மாணவர் சுஜித்குமார் சேட்டு அரசு மருத்துவ கல்லூரியில் 5 ஆண்டுகள் படிக்க கல்வி-தேர்வு-விடுதி-புத்தகம் உள்ளிட்டவற்றுக்கான செலவு ரூ.4 லட்சத்தை சேலம் மத்திய மா.செயலாளர் அண்ணன் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் இன்று வழங்கினேன்.

ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் ஏ.சி.எம்.செல்வகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சகோதரர் அருண் பிரசன்னா, ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணன் கோபால்சாமி ஆகியோர் அப்போது உடனிருந்தனர். அண்ணன் ஆர்.ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி. வருங்கால மருத்துவர் தம்பி சுஜித்குமாருக்கு வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார். ஏழை மாணவரின் மருத்துவ படிப்புக்கு உதவி செய்த தி.மு.க-வின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories