தமிழ்நாடு

“பா.ஜ.கவின் ரத யாத்திரை மழையில் பூக்கும் காளான்.. தானாக அழிந்துவிடும்” - தயாநிதி மாறன் விமர்சனம்!

ரத யாத்திரை என்ற பெயரில் தமிழக பிரச்சனைகளை பா.ஜ.க திசை திருப்புவதாக தயாநிதி மாறன் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

File image
File image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க நடத்தும் வேல் ரத யாத்திரை மழையில் பூக்கும் காளான்போல் தேர்தல் முடிந்த பிறகு தானக அழிந்துவிடுமென தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா பகுதியைச் சுற்றியுள்ள பூ பேகன் தெரு, கோபால் தாஸ் சாலை, விராண்புரம், பம்பிங் ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்க கூடிய மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சம் செலவில் போர்வாள் அமைக்கப்பட்ட தண்ணீர் மோட்டார் அறை கட்டப்பட்டுள்ளது.

அதேபோல், மே தின பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்காக ரூபாய் 20 லட்சம் செலவில் புதிய விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிந்தாரிப்பேட்டை கூவம் சாலையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ஜெ அன்பழகன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 15 லட்சம் செலவில் புதிய சத்துணவு கூடத்தையும் அமைத்து வருகின்றனர். கட்டட வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு புதிதாக கட்டிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

மத்திய சென்னை பாராளுமன்ற நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் இறகு பந்து உள்விளையாட்டரங்கம் கட்டுவதற்கான பணியையும் அடிக்களை தயாநிதி மாறம் துவக்கிவைத்தார். அப்பொழுது திமுக சேப்பாக்கம் தொகுதி செயலாளர் மதன் மோகன், வட்டச் செயலாளர்கள் ஜெகதீசன் மற்றும் மகேஷ் உட்பட கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறியதாவது:

“வேல் ரத யாத்திரையை பார்த்து தி.மு.க தலைவர் பயப்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கூறியியுள்ளார். மக்களுக்கு பெருந்தொற்று வந்துவிட்டதே என்றும் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது என்றுதான் தி.மு.க அச்சப்படுகிறது. ரத யாத்திரைக்கு இல்லை. தி.மு.கவை மத வெறுப்பு அரசியல் செய்ய பா.ஜ.க இழுப்பதாகவும், தமிழக பா.ஜ.க தலைவர் முருகனுக்கு தன் பலம் என்ன என்று தெரியாமல் இருக்கிறது.

மேலும் ரத யாத்திரை என்ற பெயரில் தமிழக பிரச்சனைகளை பா.ஜ.க திசை திருப்புவதாகவும், தமிழக மக்கள் படித்தவர்கள் இதைக்கண்டு ஏமாறமாட்டர்கள். நீட், உத்திரப்பிரதேச தலித் பெண் பாலியல் வன்புணர்ச்சி செய்யபட்டபொது, தமிழ்நாட்டில் வேலையின்மை இருக்கும்போது எல்லாம் ஏன் பா.ஜ.க போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பி அவர், வேல் ரத யாத்திரை மழையில் பூக்கும் காளான் போன்று தேர்தல் நேரத்தில் வரும் பின் அழிந்துவிடும்” என அவர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories