தமிழ்நாடு

சிவகாசி பட்டாசுகளை அனுமதித்து சீன பட்டாசுகளை தடை செய்திடுக - ராஜஸ்தான் முதல்வருக்கு காங்கிரஸ் MP கடிதம்!

சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாக வேலை செய்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிவகாசி பட்டாசுகளை அனுமதித்து சீன பட்டாசுகளை தடை செய்திடுக - ராஜஸ்தான் முதல்வருக்கு காங்கிரஸ் MP கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுகளை தடை செய்வதை மறுபரிசீலனை செய்யவும், சீன பட்டாசுகளை தடை செய்து சிவகாசி பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ராஜஸ்தான் முதல்வருக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது:

“ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனைக்கு தடை செய்வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மா அவர்களிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு சிவகாசி பட்டாசுக்கான தடையை நீக்குக என்று கேட்டுக்கொண்டேன். மேலும் தீபாவளியின் ஒரு நாளை முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக மாற்ற சிவகாசியில் உள்ள தொழிலாளர்கள் 364 நாட்கள் வேலை செய்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி மக்கள் வாழ்வாதாரத்தை காக்க உதவ வேண்டும்.

சிவகாசி பட்டாசுகளை அனுமதித்து சீன பட்டாசுகளை தடை செய்திடுக - ராஜஸ்தான் முதல்வருக்கு காங்கிரஸ் MP கடிதம்!

கொரோனா வைரஸினால் பட்டாசு உற்பத்தி தொழில் துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேலும் வரவிருக்கும் பண்டிகை காலத்துடன் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கொண்டுவர மிகக்கடுமையான போராட்டத்தில் உள்ளனர். சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாக வேலை செய்கின்றனர். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இத்தகைய சுற்றுச்சூழலுக்கு தகுந்த பட்டாசுகளாகும். ஆனால் சீன பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு தகுதியற்ற பட்டாசுகள் ஆகும்.

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சிறிய வர்த்தகர்கள் பலர் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெற்று முன்கூட்டியே ஆர்டர்கள் எடுத்து வாங்கி உள்ளனர். கொரோனாவால் ஏற்கனவே மந்தநிலையில் காணப்படுவதால் அரசாங்கத்தின் இத்தகைய முடிவை மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால் வர்த்தகர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள். எனவே இதுபோன்ற சிறு குறு வணிகர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பாளர்களின் நலனுக்காக இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும். மேலும் இந்த தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக கொண்டாட வழிவகை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories