தமிழ்நாடு

MP, MLAக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் தேவையில்லை - உச்ச நீதிமன்றத்தில் ஐகோர்ட் பதில்!

எம்பி, எம்எல்ஏ களின் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் தனி நீதிமன்றம் தேவை இல்லை சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த பதிலில் கூறியுள்ளது.

MP, MLAக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் தேவையில்லை - உச்ச நீதிமன்றத்தில் ஐகோர்ட் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பல மாநிலங்கள் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உயர் நீதிமன்றங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் குற்றவியல் விதிகள் குழுவானது தமிழகத்தில் எம்எல்ஏ, எம்பிக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் தேவை இல்லை என்று கூறியுள்ளது.

ஏற்கனவே, ஊழல் தடுப்பு சட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றங்கள் இருக்கும் போது புதிதாக எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்க கூடுதலாக தனி நீதிமன்றம் தேவை இல்லை.

MP, MLAக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் தேவையில்லை - உச்ச நீதிமன்றத்தில் ஐகோர்ட் பதில்!

ஒரு வழக்கை மையமாகக் கொண்டு மட்டுமே சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடியும். குற்றவாளிகளை மையமாகக்கொண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடியாது அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்களும், கூடுதல் அமர்வு நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை சென்னையில் அமைத்தால் கன்னியாகுமரியில் இருந்து ஒருவர் 700 கிலோமீட்டர் தாண்டி சென்னைக்கு வர வேண்டியிருக்கும். இது நடைமுறை சிக்கல்களை அதிகரிக்கும், வழக்கு விசாரணைகளை மேலும் தாமதப்படுத்தும் என்று பதிலில் கூறி உள்ளனர்.

தமிழகம் போன்று உத்தராகண்ட் மாநிலமும் சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories