தமிழ்நாடு

‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக பொங்கி எழுந்த பேராசிரியர் : 1960ல் சட்டசபையை அதிரச் செய்த பேராசிரியரின் உரை!

தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் வைக்க மறுப்பது ஏன் என அப்போதையை காங்கிரஸ் அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் 1960ம் ஆண்டு பேராசிரியர் பெருந்தகை ஆற்றிய உரையின் தொகுப்பு...

‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக பொங்கி எழுந்த பேராசிரியர் : 1960ல் சட்டசபையை அதிரச் செய்த பேராசிரியரின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1956 நவம்பர் 1 - இன்று மொழிவாரியாக தமிழகம் ‘மெட்ராஸ் பிரெசிடென்சியாக’ பிரிக்கப்பட்ட நாள். தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் மறைந்த ‘பேராசிரியர் பெருந்தகை’ ஆற்றிய பணிகள் ஏராளம்.

அதன் ஒருபகுதியாக, தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் வைக்க மறுப்பது ஏன் என அப்போதையை காங்கிரஸ் அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதியன்று பேராசிரியர் பெருந்தகை ஆற்றிய உரையின் தொகுப்பு...

குறிப்பாக, தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்றும், பெயரின் பின்னணி குறித்தும் 1960ம் ஆண்டே சட்டசபையில் பேராசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

அதன்படி, 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதியன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தின் போது பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.எஸ்.சின்னதுரை என்பவர் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் கோரி தீர்மானத்தை கொண்டுவந்தார்.

‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக பொங்கி எழுந்த பேராசிரியர் : 1960ல் சட்டசபையை அதிரச் செய்த பேராசிரியரின் உரை!

இதற்கு அப்போதைய ஆளும் மாநில அரசான காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததோடு, தமிழ்நாடு என்ற பெயர் சங்க இலக்கியத்தில் இருந்துள்ளதா? அந்தப் பெயர் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் இருக்கிறதா? என ஏளனமாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

அந்த பேச்சுக்கு பொங்கி எழுந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான பேராசிரியர் க.அன்பழகனின் உரை காலத்திற்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

அந்த உரையில், “ ‘தமிழ்நாடு’ என பெயர் வைப்பதற்கு இவ்வளவு மறுப்புச் சொல்கிறவர்கள், ‘தமிழ்நாடு’ எனச் சொன்னால் என்ன இழுக்கு என்று சொல்லட்டும். தமிழன் மூச்சோடு வாழ்கிற வரையில், தமிழ்நாட்டில் தமிழ் இனம் இருக்கிற வரையில், ‘தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கொரு குணம் உண்டு’ என்று நாமக்கல் கவிஞர் பெருமையாகப் பாடியிருக்கிற மக்கள் உள்ள வரையில் அவர்களுக்கு அடையாளமாக என்ன தரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக பொங்கி எழுந்த பேராசிரியர் : 1960ல் சட்டசபையை அதிரச் செய்த பேராசிரியரின் உரை!

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால் பிரிவினை நின்றுவிடாது. நாட்டிற்கு பெருமை எனக் கருதுவதால்தான் தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி கேட்கிறோம். அதேபோல, சங்ககால இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லையென சொல்வது சரியல்ல. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில், சேர, சோழ, பாண்டிய நாடுகள் தனித்தனியாக இருந்த காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இருந்திருக்கிறது.

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றிருந்ததை அதை படித்துப் பார்த்தாலே நன்றாகத் தெரிய வரும். ‘தண்டமிழ் வேலி தமிழ்நாட்டுக்கு அகமெல்லாம்’ என பரிபாடலிலும், ‘இமிழ் கடல்வேலி தமிழகம்’ என பதிற்றுப் பத்து ஏட்டிலும், ‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்’ என சிலப்பதிகாரத்திலும் ஒலிக்கிறது.

பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டை ஆண்டு வந்த வேந்தர்கள் இப்பெயரை ஏற்றிருந்திருக்கிறார்கள். இந்த ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் செய்யக் கோருவது திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமே சொல்லியிருந்தாலாவது ஏற்கமாட்டேன் என நீங்கள் சொல்லலாம். தமிழ்நாடு என்ற பெயரை வைக்க வேண்டுமென்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க சொல்லியிருக்கிறார்.

‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக பொங்கி எழுந்த பேராசிரியர் : 1960ல் சட்டசபையை அதிரச் செய்த பேராசிரியரின் உரை!

விருதுநகரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் இதற்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிர் நீத்தார். தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டு அதனை காதாரக் கேட்க வேண்டும் என நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் கேட்டுக்கொண்டார்.

“தமிழ்நாடு எனும் பெயரை வைத்துத் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பெருமைப்படுத்த வேண்டும். அப்பெயரைக் கொண்டே இந்நாட்டுக்கு புகழ்முடிசூட்டவேண்டும்” என வேண்டிக்கேட்ட தமிழறிஞர்கள் பற்பல. மத்தியில் ஆட்சியில் உள்ள அகில இந்திய காங்கிரஸே இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

அப்படி இருக்கையில் இங்குள்ளவர்களுக்கு மட்டும் ஏன் மனம் வரவில்லை? முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியும் ஏன் இந்த மறுப்பு? என சரமாரியாக பேராசிரியர் பெருந்தகை அப்போதை மாநில காங்கிரஸார் மத்தியில் சட்டமன்றத்தில் வாதாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories