தமிழ்நாடு

“சிறிய அளவில் பயணளிக்கும் 7.5% ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இழுத்தடித்தது வெட்கக்கேடானது” - தயாநிதி மாறன் சாடல்

மருத்துவக்கல்வியில் 7.5 உள் ஒதுக்கீடு என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறிய அளவிலேயே பயனளிக்கும் என மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

“சிறிய அளவில் பயணளிக்கும் 7.5% ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இழுத்தடித்தது வெட்கக்கேடானது” - தயாநிதி மாறன் சாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் இழுத்தடிப்பு செயல் வெட்கக்கேடானது என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணடியில் ஏற்கனவே கட்டப்பட்டு திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தை சீர் செய்து தயாநிதி மாறன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படவுள்ள புதிய அங்கன்வாடி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மூலம் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும், அங்குள்ள தாயார் சாஹிப் தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கூட கட்டடத்தை ஆய்வு செய்தார்.

“சிறிய அளவில் பயணளிக்கும் 7.5% ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இழுத்தடித்தது வெட்கக்கேடானது” - தயாநிதி மாறன் சாடல்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் தொடர்ந்து அத்தியாவசிய பணிகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும், பத்துக்கும் மேற்பட்ட நலத்திட்ட பணிகள் இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தை பொறுத்தவரை ஆளுநரின் இழுத்தடிப்பு செயல் வெட்கக் கேடானது என்றார். 7.5 உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கு சிறு துளி அளவே பயன் அளிக்கும். ஆளும் அமைச்சர்கள் ஆளுநரிடம் உரிய அழுத்தத்தை தராத நிலையில் தி.மு.கவின் ஆர்ப்பாட்டம் மூலமாக உள் ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது தி.மு.கவுக்கு மட்டுமே கிடைத்த வெற்றி.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்துக்கு பிறகு தான் ஆளுநர் ஒப்புதல் முடிவுக்கே வந்துள்ளார் என்றும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நீட் தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் காக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், அ.தி.மு.க அரசுக்கு மக்கள் நலனில் நாட்டம் இல்லை எனத் தெரிவித்த தயாநிதி மாறன், தங்களது அரசை பாதுகாத்து கொள்வதிலேயேதான் அமைச்சர்கள் அக்கறை செலுத்துகின்றனர் என குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories