தமிழ்நாடு

“யூடியூப் வீடியோ பார்த்து பைக் திருட்டு” : கஞ்சா வாங்க இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர்கள் கைது!

கஞ்சா வாங்க யூடியூப் பார்த்து இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைக்க கற்றுக்கொண்டு இருசக்கர வாகனம் திருடிய இரண்டு வாலிபர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“யூடியூப் வீடியோ பார்த்து பைக் திருட்டு” : கஞ்சா வாங்க இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர்கள் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை துரைப்பாக்கம் அடுத்த பெருங்குடி, திருமலைநகரை சேர்ந்த விவேக் (32) என்பவர் தனது வீட்டின் முன் நிறுத்திவைத்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என்று துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, வாகனத்தைத் திருடியவர்கள் துரைப்பாக்கம், கண்ணகிநகர், விஜிபி அவென்யூ, மேட்டுக்குப்பம், பள்ளிக்கரணை, ஈச்சங்காடு ஆகிய பகுதிகளில் கடந்து, பின் மேடவாக்கம் வெள்ளக்கல் பகுதியில் திருடிய வாகனத்தை நிறுத்திவிட்டு மற்றொரு வழியாக மீண்டும் துரைப்பாக்கம் வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தைத் திருடியவர்கள் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் (23) காரைக்குடியை சேர்ந்த ஹரிநிகிஷ் (22) என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்றும், இவர்கள் செய்துவந்த சி.என்.சி மெசின் ஆப்ரேட்டர் வேலை பறிபோனதால் ஹரிநிகிஷ் தனது டியோ இருசக்கர வாகனத்தை அடைமானம் வைத்துள்ளனர்.

மேலும், அடகு வைத்த இருசக்கர வாகனத்தை மீட்கவும் கஞ்சா வாங்கவும் பணம் தேவைப்பட்டதால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க இருசக்கர வாகனத்தைத் திருட இருவரும் முடிவெடுத்துள்ளனர். இதற்காக யூ டியூப்பில் இருசக்கர வாகன பூட்டை உடைப்பது எப்படி என்று விடியோ பார்த்து தெரிந்துகொண்டுள்ளனர்.

“யூடியூப் வீடியோ பார்த்து பைக் திருட்டு” : கஞ்சா வாங்க இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர்கள் கைது!

இதனையடுத்து அதேபோல் பெருங்குடி திருமலை நகரில் இருசக்கர வாகனத்தைத் திருடியதாகவும் திருடிய வாகனத்தை வெள்ளக்கல் பகுதியில் நிறுத்திவிட்டு இருதினம் கழித்து சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பட்டுக்கோட்டை காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்து இருசக்கர வாகனத்தை போலிஸார் மீட்டுள்ளனர். பின்னர் இருவரையும் கைது செய்த துரைப்பாக்கம் போலிஸார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

சென்னையில் கஞ்சா விற்பனை அதிகரிப்பதே இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாவதும் ,மேலும் இதன் மாதிரி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதும் வைக்கிறது. தமிழகத்தில் முக்கியமாகச் சென்னையில் கஞ்சா விற்பனையை ஒழிக்க ஆளும் அதிமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது உன்மைக்கு எடுத்துக்காட்டே இந்த சம்பவம்.

banner

Related Stories

Related Stories