தமிழ்நாடு

தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதல்வராக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம்: கே.என்.நேரு பேட்டி!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதலல்வராக்குவதற்கான, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம், தி.மு.க கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் இன்று நடைப்பெற்றது.

இதனையடுத்து தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருச்சியில் முப்பெரும் விழா நடத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இசைவு தந்துள்ளார். அந்த விழாவில் தி.மு.க-வின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட உள்ளது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

ஒவ்வொரு இயக்கமும் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. நாங்களும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக்குவதற்கு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். அதற்கான ஒரு முன்னோட்ட கூட்டம் தான் இது.

தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதல்வராக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம்: கே.என்.நேரு பேட்டி!

கடலூரில் தலித் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இது போன்ற செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

உள்ளாட்சி தேர்தலே நடத்த முடியாமல் இருந்த இடங்களில், தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது தான் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த நான்கு ஊராட்சிகளிலும், ஊராட்சி மன்ற தலைவராக தலித்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என கூறினார்.

இக்கூட்டத்தில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்து செல்வம், விஜய ஜெயராஜ் , ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், வழக்கறிஞர் பாஸ்கர் சேர்மன் துரைராஜ். கருப்பையா, கதிர்வேல் பழனியாண்டி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories