தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,489 பேர் பாதிப்பு - 66 பேர் பலி : இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் இன்று 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 6.19 லட்சத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,489 பேர் பாதிப்பு - 66 பேர் பலி : இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 5,489 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,19,996-ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல், மொத்தம் பலி எண்ணிக்கை 9,784-ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் ஒரே நாளில் 1,348 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 172773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 46,120 பேர் சிகிச்சை தற்போது பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 77,00,011 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 86,012 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories