தமிழ்நாடு

சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை : கால்டாக்சி டிரைவா் போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கால்டாக்சி டிரைவா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை : கால்டாக்சி டிரைவா் போக்சோ சட்டத்தில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் மாணவி ஒருவரை கால்டாக்சி டிரைவா் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் பிளஸ் டூ தோ்வில் தோல்வியடைந்ததால் மறுதோ்வு எழுத தயாராகிக்கொண்டிருந்தாா்.

இதனிடையே சென்னை மதுரவாயலை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் சுரேஷ் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில், தள்ளு வண்டியில் அனகாபுத்தூா் பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்து வந்துள்ளாா். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியுடன் பேசி பழகியுள்ளார்.

சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை : கால்டாக்சி டிரைவா் போக்சோ சட்டத்தில் கைது!

இந்நிலையில், கடந்த மாதம் மாணவி 18ம் தேதி ஹால் டிக்கேட் வாங்கிவர பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால், மாணவியின் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு விசாரித்து வந்த போலிஸார், மாணவியை சுரேஷ் கடத்திய கண்டுப்பிடித்து, அவரிடமிருந்து மாணவியை மீட்டனா்.

போலிஸ் விசாரணையில், ஆசைவார்த்தை கூறி தன்னை கால் டாக்சி டிரைவா் சுரேஷ் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி தெரிவித்தார். அதனடிப்படையில், சங்கா்நகா் போலிஸார் மாணவியை ஆசைவாா்த்தை கூறி கடத்துதல் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கைக்காக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மாணவியை மருத்துவ பரிசோதணைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories