தமிழ்நாடு

கோயம்பேட்டில் அலைமோதும் கூட்டம் : விதிமுறைகள் பின்பற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் - வியாபாரிகள் கவலை!

கொரோனா தொற்று காரணமாக சுமார் 5 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு மொத்த அங்காடி இன்று திறக்கப்பட்டதையடுத்து முகக்கவசம், சமுக இடைவெளி முறையாக இல்லாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் அலைமோதும் கூட்டம் : விதிமுறைகள் பின்பற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் - வியாபாரிகள் கவலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா தொற்று காரணமாக கடந்த 5மாதங்களாக கோயம்பேடு மொத்த அங்காடி மூடப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு கட்ட வழிமுறைகளுடன் அரசின் உத்தரவுப்படி அங்காடி திறக்கப்பட்டது. அதன்படி நள்ளிரவு முதல் வாகனங்களில் காய்கறிகள் வந்திறங்க, வியாபாரிகள் அதனை வாங்கி செல்கின்றனர்.

இதனிடையே பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். மேலும், வாகனங்கள் வந்து செல்ல கூடுதலாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்ட போதிலும், வாகனங்கள் உள்ளே வருவதில் சிக்கல் இருப்பதால், குறிப்பிட்ட நேரத்தில் காய்களை இறக்குவதிலும், வியாபாரம் செய்வதிலும் சிக்கல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

காய்கறிகளின் விலையை பொறுத்தவரை இன்று அனைத்து காய்கறிகளும் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லை எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories