தமிழ்நாடு

“ஆன்லைன் பாடம் புரியவில்லை : முதல்வரிடம் பரிசு வென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை” - சிவகங்கையில் பரிதாபம்!

ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் சரிவர புரியாத காரணத்தால் சிவகங்கை செல்லப்பனேந்தல் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆன்லைன் பாடம் புரியவில்லை : முதல்வரிடம் பரிசு வென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை” - சிவகங்கையில் பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்கும் நடைமுறை தொடர்ந்து வருகிறது.

இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் ஃபோன், இணைய வசதி என ஏதும் இல்லாத கிராமப்புற மாணவர்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொள்ளும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவரின் மகள் சுபிக்‌ஷா. இவர் மதுரையில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்திருக்கிறார் சுபிக்‌ஷா.

“ஆன்லைன் பாடம் புரியவில்லை : முதல்வரிடம் பரிசு வென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை” - சிவகங்கையில் பரிதாபம்!

தொடக்கத்தில் உற்சாகத்துடன் வகுப்புகளில் பங்கேற்ற சுபிக்‌ஷாவுக்கு அண்மைக்காலங்களாக பாடச் சுமை அதிகரித்தால் பெற்றோர், சகோதரரிடத்திடம் கூட பேசுவதற்கான நேரம் கிட்டாமல் போயிருக்கிறது. மேலும் தினந்தோறும் அதிகாலையிலேயே விழித்து இரவு 11 மணிக்கு மேல்தான் பாடங்களை முடித்துவிட்டு சுபிக்‌ஷா தூங்கச் செய்கிறார்.

பள்ளியில் கொடுக்கும் பாடச் சுமையையும், ஆன்லைன் வகுப்புகள் சரி வர புரியாததையும் பெற்றோரிடத்தில் தெரிவிக்காமல் சுபிக்‌ஷா மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 14ம் தேதி இரவு 11 மணிக்கு மேலாக வீட்டின் பின்புற கழிவறையில் மாணவி சுபிக்‌ஷா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். கழிவறைக்குச் சென்று வெகு நேரமாகியும் சுபிக்‌ஷா வராததால் பெற்றோர் சென்று பார்த்தபோது மகளை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

“ஆன்லைன் பாடம் புரியவில்லை : முதல்வரிடம் பரிசு வென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை” - சிவகங்கையில் பரிதாபம்!

அதன் பிறகு சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, சுபிக்‌ஷா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் சுபிக்‌ஷாவின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவி சுபிக்‌ஷா முதல் இடம் பிடித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையால் பரிசு பெற்றிருந்தார்.

banner

Related Stories

Related Stories