தமிழ்நாடு

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் செல்லமுடியாத வகையில் கம்பி வேலி - நேரில் சென்று தீர்வு கண்ட தி.மு.க எம்.பி!

தருமபுரி மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூக விவசாய குடும்பத்திற்கு நடைபாதை மறுக்கப்பட்ட விவகாரத்தில் தி.மு.க எம்.பி செந்தில்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து சுமுக தீர்வு காண உதவியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சிடுவம்பட்டி என்ற கிராமத்தைச் விவசாயி வீட்டிற்குச் செல்லும் வழியை மறித்து, கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களாக அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அர்ஜூனன், தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரது வீட்டிற்குச் சென்று வரும் வழியை அடைத்து, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர் கம்பி வேலி அமைத்துள்ளார்.

தீண்டாமை சுவர் போல் வேலி அமைத்ததால் அர்ஜூனன் குடும்பத்தினர் மளிகை பொருட்கள் வாங்கவோ, பிற தேவைகளுக்கோ வெளியே சென்று வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அர்ஜூனனின் சகோதரர் வேலியின் மறுபுறத்தில் இருந்து தேவையான பொருட்களை வாங்கி வீசி வந்துள்ளார்.

இந்த விவகாரம் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இந்தத் தகவல் அறிந்த தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார், சிடுவம்பட்டி கிராமத்துக்கு அதிகாரிகளோடு நேரில் சென்று, தடுப்பு வேலி அமைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த விவகாரத்தில் எவ்வித சிக்கலும் ஏற்படாதவாறு சுமுக முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதையடுத்து, வேலியை அகற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். நேரில் சென்று பேசி பிரச்னைக்கு நல்ல தீர்வை எட்ட உதவிய தி.மு.க எம்.பி-க்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories