தமிழ்நாடு

மருத்துவர் தாரா நடராசன் கொரோனாவால் மறைவு - தி.மு.க தலைவர் இரங்கல்!

தமிழறிஞர் டாக்டர் அவ்வை நடராசன் அவர்களது துணைவியார் டாக்டர் தாரா நடராசனின் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் அவ்வை நடராசன் அவர்களது துணைவியார் டாக்டர் தாரா நடராசன் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :

“தமிழறிஞர் டாக்டர் அவ்வை நடராசன் அவர்களின் துணைவியார் மருத்துவர் தாரா நடராசன் அவர்கள் திடீரென்று மறைவுற்றார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர் தாரா நடராசன் கொரோனாவால் மறைவு - தி.மு.க தலைவர் இரங்கல்!

டாக்டர் அவ்வை நடராசன் அவர்களின் தமிழ்த்தொண்டில் உற்ற துணையாக இருந்த அவர், குழந்தை நல மருத்துவராகவும், குடும்பத் தலைவியாகவும் எளிமைக்கும், பொறுமைக்கும் இலக்கணம் படைத்த தாயன்பு மிக்கவர். அவரை கொரோனா நோய்த் தொற்று கொடூரமாகப் பறித்துக்கொண்டது பேரிழப்பாகும்.

டாக்டர் அவ்வை நடராஜன் அவர்களுக்கும் - குடும்பத்தாருக்கும் - சக மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

banner

Related Stories

Related Stories