தமிழ்நாடு

முதுகலை பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத விரக்தி.. அத்தையை ஓட ஓட விரட்டி கொடுவாளால் வெட்டிய இளைஞர்

முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தும் வேலை கிடைக்காத விரக்தியிலிருந்த வாலிபர், அத்தையைக் கொடுவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடீஸ்வரன்
(கைது செய்யப்பட்டவர்) கோடீஸ்வரன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பாலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள் அஞ்சலை தம்பதியினர், இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகன் கோடீஸ்வரன், இவர் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் பி.எட்., படித்துவிட்டு ஊதுபத்தி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்தநிலையில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத மன உளைச்சலில் இருந்த கோடீஸ்வரன், கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டது போலவே திரிந்துள்ளார். மேலும் அடிக்கடி குடும்பத்தில் தகராறிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல குடும்பத்தினருடன் தகராற்றில் ஈடுபட்டிருக்கிறார் கோடீஸ்வரன். அப்போது வீட்டிலிருந்த கொடுவாளை எடுத்துக்கொண்டு அவரது பெற்றோரைத் தாக்க முயற்சி செய்திருக்கிறார்.

இதனைப் பார்த்துப் பதறிப்போன கோடீஸ்வரனின் பெரியப்பா பெரியண்ணன் அத்தை லட்சுமி ஆகியோர் வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடியிருக்கின்றனர். ஆனாலும் அவர்களை விடாது துரத்திச் சென்ற கோடீஸ்வரன், 68 வயதான அத்தை லட்சுமியைக் கொடுவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் நடுரோட்டில் ஓடிய 70 வயதான பெரியப்பா பெரியண்ணன் மற்றும் இருசக்கர வாகனத்தில் அவ்வழியே சென்று கொண்டிருந்த 30 வயதான நரேஷ்குமார் என்ற இளைஞர் ஆகிய இருவரையும் துரத்திச்சென்று நடுரோட்டில் கொடுவாளால் வெட்டியுள்ளார். இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

இதில் பெரியண்ணன் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற புதுச்சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பதுங்கி இருந்த கோடீஸ்வரனை கைது செய்வதற்காக முயற்சி செய்துள்ளனர். நீண்ட நேரம் வீட்டின் கதவை தட்டியும் கோடீஸ்வரன் வெளியே வராததால், பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், கோடீஸ்வரினின் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி, கொடுவாளுடன் வீட்டின் அறையில் பதுங்கியிருந்த கோடீஸ்வரனை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories