தமிழ்நாடு

“ரூ.1.5 கோடி பண மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ” - பெண் புகார்!

திருப்போரூர் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மனோகரன் ரூ.1.5 கோடி மோசடி செய்துள்ளதாக மடையத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி திரிபுரசுந்தரி போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

“ரூ.1.5 கோடி பண மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ” - பெண் புகார்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருப்போரூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தண்டரை கே.மனோகரன் 1.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக, திருப்போரூர் அருகே மடையத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணி இணை செயலாளர் திரிபுரசுந்தரி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மடையத்தூர் பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவர் அ.தி.மு.க ஊராட்சி கழக செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இவர் முன்னாள் திருப்போரூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தண்டரை மனோகரன் மற்றும் தர்மலிங்கம் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு திருப்போரூர் அருகே காட்டூர் கிராமத்தில் 8 ஏக்கர் நிலத்தை இந்த மூவரும் கூட்டாகச் சேர்ந்து வாங்கியுள்ளனர். பின்னர் 2009ல் அந்த நிலத்தை விற்பனை செய்த தொகையில் பஞ்சாட்சரத்திடம் ரூபாய் 50 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி 1.5 கோடி ரூபாயை பின்னர் தருவதாகக் கூறியுள்ளார்.

அதன்பின் பலமுறை பஞ்சாட்சரம் கேட்டபோதெல்லாம் பணம் வரவிருப்பதாகவும் தருவதாகவும் கூறிவந்துள்ளார். இந்நிலையில் 2018ல் பஞ்சாட்சரம் காலமான நிலையில் அவரது மனைவியும் அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளருமான திரிபுரசுந்தரி, முன்னாள் எம்.எல்.ஏ மனோகரனிடம் பணத்தைக் கேட்டு வந்துள்ளார்.

“ரூ.1.5 கோடி பண மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ” - பெண் புகார்!
Vignesh

தொடர்ந்து கேட்டும், பணம் தராமல் இழுத்தடித்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ மனோகரன், இன்று இனி பணம் தர முடியாது. உன்னால் என்ன செய்யமுடியும் என்று சவால்விட்டதோடு, திரிபுரசுந்தரியை தகாத வார்த்தைகளால் திட்டி, இனி பணம் கேட்டு வந்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க நிர்வாகி திரிபுரசுந்தரி, தனது கணவருடன் சேர்ந்து வாங்கிய நிலத்தை விற்று பணத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ தண்டரை மனோகரன் மீது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணமோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories