தமிழ்நாடு

Fake Alert: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு தி.மு.க சட்ட உதவி செய்வதாக பரப்படும் போலி செய்தி

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குள்ளான யூடியூப் சேனலுக்கு தி.மு.க தலைவர் சட்ட உதவிகளை செய்வதாக குறிப்பிட்டு பொய்ச் செய்தியை சமூக விரோதிகள் பரப்பி வருகின்றனர்.

Fake Alert: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு தி.மு.க சட்ட உதவி செய்வதாக  பரப்படும் போலி செய்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வழிபாட்டு பாடல்களை விமர்சித்ததாக எழுந்த புகாரை அடுத்து, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிர்வாகிகளை அண்மையில் போலிஸார் கைது செய்தனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்து பல விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலுக்காக சட்ட ரீதியில் உதவுவதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக குறிப்பிட்டு செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தை கொண்ட செய்தியை திரித்து, ஃபோட்டோஷாப் உதவியுடன் மாற்றியமைத்து வதந்திகளையும், பொய்ச் செய்திகளையும் விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

Fake Alert: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு தி.மு.க சட்ட உதவி செய்வதாக  பரப்படும் போலி செய்தி
Fake Alert: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு தி.மு.க சட்ட உதவி செய்வதாக  பரப்படும் போலி செய்தி

இது முற்றிலும் பொய்ச் செய்தியாகும். மக்களிடையே தி.மு.கவிற்கு இருக்கும் நற்பெயரை கெடுப்பதற்காகவே சில சமூக விரோதிகள் இது போன்ற விஷமச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

தொழில்நுட்ப உதவியுடன் இவ்வாறு போலி தகவல்களை பரப்பி லாபமடைய நினைக்கும் சமூக விரோதிகள் மீது சைபர் கிரைம் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories