தமிழ்நாடு

மாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்!

தனது குற்றச்சாட்டுக்கு நியூஸ் 18 பதில் அளித்திருப்பதாக மாரிதாஸ் வெளியிட்ட தகவல் பொய் எனத் தெரிய வந்துள்ளாது .

மாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கருத்தியல் ரீதியாக பதில் பேச முடியாத வலதுசாரிகள், பின்பற்றும் ஒரே யுக்தி பொய் செய்தி. ஒரு பொய்யை பலமுறை கூறினால் உண்மையாக்கி விடலாம் என்பதே அவர்களின் அற்ப அரசியல் கொள்கை. அப்படி திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புவதில் முதன்மையானவர் மாரிதாஸ் என்பவர்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மீதும், பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகளை எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகவியலாளார்களை அவதூறாக சித்தரித்து மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆராய்ச்சி என்ற பெயரில் அபத்தங்களை பேசியிருந்தார். அதில் , நியூஸ் 18 தமிழ் செய்தி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மீது ஜோடிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளை உண்மைக்கு புறம்பாக திரித்து, நியூஸ் 18 குழும தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளார்கள் மீது வெளிப்படையாக அவதூறுகளை சுமத்தியது, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல தரப்பிலும் கண்டனங்கள் பறந்தன. இந்நிலையில், நியூஸ்18 தலைமையிடம் இருந்து தனக்கு மின் அஞ்சல் மூலம் பதில் வந்திருப்பதாக மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மாரிதாஸ்.

தனக்கு வந்ததாக மாரிதாஸ் கூறிய மின் அஞ்சல்
தனக்கு வந்ததாக மாரிதாஸ் கூறிய மின் அஞ்சல்

நியூஸ்18 ஆசிரியர் வினய் சராவகி என்பவரிடம் இருந்து அந்த பதில் வந்ததாகவும், குற்றச்சாட்டுகளை நியூஸ்18 தலைமை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது என, அந்த மின் அஞ்சலை காட்டினார்.

ஆனால், விசாரித்ததில், நியூஸ் 18 தலைமை அப்படி எந்த ஒரு பதிலையும் தரவில்லை என தெரிவித்திருக்கிறது. செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து வெளியிடும் youturn செய்தி நிறுவனம், நியூஸ் 18 செய்தித் தொடர்பாளர் சுப்ரியா சக்சேனாவிடம் இது குறித்து விளக்கம் கேட்டது. அதை முற்றிலுமாக மறுத்த சுப்ரியா, தங்கள் ஆசிரியர் குழுவில் உள்ளவரின் பெயரை பயன்படுத்தி சிலர் போலி மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர் என்றார். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Youturn  நிறுவனம் மேற்கொண்ட மின் அஞ்சல் ஆய்வு
Youturn நிறுவனம் மேற்கொண்ட மின் அஞ்சல் ஆய்வு
நியூஸ் 18 செய்தித் தொடர்பாளரின் பதில்
நியூஸ் 18 செய்தித் தொடர்பாளரின் பதில்

அதுமட்டுமல்ல, மாரிதாஸ் குறிப்பிட்டுள்ள நியூஸ் 18 ஆசிரியர் வினய் சராவகி, தனது பெயரில் போலி மின் அஞ்சல் வளம் வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம், மாரிதாஸ் வெளியிட்ட இந்த தகவலும் 'பொய்' என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த பொய்யான மின் அஞ்சலை அவரே உருவாக்கினாரா, அல்லது வேறு யாராவது அனுப்பினார்களா என்பதை தனது அறிவார்ந்த குழு கொண்டு ஆராய்ந்து வீடியோ வெளியிடுவாரா மாரிதாஸ்?. இப்படிப்பட்ட பொய்யர்களிடம் இருந்து தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

banner

Related Stories

Related Stories