தமிழ்நாடு

“காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் !

“காயிதே மில்லத் அவர்கள் கட்டிக்காத்த மதநல்லிணக்கம் - சிறுபான்மையினர் நலன் - மொழிப்பற்று - இனப்பற்று கொண்டவர்களாக நாம் அனைவரும் செயல்படுவோம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் 125-வது பிறந்தநாள் இன்று. ஆட்சி மொழியில் தமிழை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகவும், அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

இன்று முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினராவது அடிப்படைக் கல்வி முடித்து உயர் கல்வி பெறுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் காயிதே மில்லத். இன்று அவரது 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது. காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திரு உருவ படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் துவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் வெளியிட்டுள்ள பதிவில், “கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் 125-வது பிறந்தநாள் இன்று!

காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள். அரசியல், சமூகம், தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டு உரிமை ஆகிய அனைத்துக்கும் வழிகாட்டும் தலைவராக வாழ்ந்தவர் அவர்!

மக்களவை, மாநிலங்களவை, தமிழக சட்டமன்றம் என அனைத்திலும் உறுப்பினராக இருந்து மக்கள் தொண்டாற்றியவர்! தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவருடனும் அன்பும் கொள்கையும் கலந்த நட்புடன் இருந்தவர். 1967 தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க பேரறிஞர் அண்ணா அவர்களுக்குத் தோள் கொடுத்த தோழர்!

இசுலாம் என் மதம், தமிழ் என் தாய்மொழி என்ற கொள்கைப்படி இறுதிவரை வாழ்ந்தவர்! காயிதே மில்லத் அவர்கள் கட்டிக்காத்த மதநல்லிணக்கம் - சிறுபான்மையினர் நலன் - மொழிப்பற்று - இனப்பற்று கொண்டவர்களாக நாம் அனைவரும் செயல்படுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories