தமிழ்நாடு

“இனிமேல் செவிலியா்கள் எப்படி தைாியமாக பணி செய்வார்கள்?” : செவிலியா் மரணத்தால் கொதிக்கும் நா்சுகள் சங்கம்!

செவிலியர் பிாிசில்லாவிற்கு நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளபோது மீடியா ரிப்போா்ட் படி அவருடைய CASE SHEET ல் எப்படி கொரோனா பாசிடிவ் என எழுதப்பட்டிருந்தது என நா்சுகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

-
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

செவிலியர் பிாிசில்லா கண்காணிப்பாளாின் சிகிச்சை முறைகளில் அலட்சியமாக இருந்த மருத்துவமனை முதல்வா் டாக்டா். ஜெயந்தி அவா்கள் மீது துறை ரீதியான விசாரணை செய்து தவறிழழைத்திருந்தால் உாிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலிய கண்காணிப்பாளா் நிலை- 1 ஆக பணிபுாிந்து வந்த செவிலியர் பிாிசில்லா உடல்நலக்குறைவால் நேற்று இரவு மருத்துவமனையில் இறந்துவிட்டாா். அவரின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழக அரசு செவிலியா்களின் சாா்பாக ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தொிவித்துக் கொள்கிறோம். அவா்ின் குடும்ப உறுப்பினா்களுக்கு எங்களது ஆறுதலை தொிவித்துக்கொள்கிறோம்.

மேலும், சில தினங்களுக்கு முன் இவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் சில உடல் உபாதைகளுடன் சென்னை, இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றபோது அவாின் அறிகுறிகளை மட்டுமே கருத்தில்கொண்டு, கொரோனா டெஸ்ட் எடுக்கும் முன்னரே அவரை கொரோனா சிகச்சைப்பிாிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

“இனிமேல் செவிலியா்கள் எப்படி தைாியமாக பணி செய்வார்கள்?” : செவிலியா் மரணத்தால் கொதிக்கும் நா்சுகள் சங்கம்!

அதன்பிறகு கொரோனா பிாிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த இரண்டு கொரானா டெஸ்ட்களுமே நெகடிவ் என வந்துள்ளது. அதன்பின் இவருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. அந்தநேரம் கூட இவரை தீவிர சிகிச்சை பிாிவிற்கு மாற்றவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

நேற்று (27.05.2020) மாலை அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே அவருக்கு VENTILATOR SUPPORT கொரோனா வாா்டிலேயே செய்துள்ளனா். அதன்பின் சுமாராக இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாா் என மருத்துவமனை நிா்வாகம் தொிவித்துள்ளது. இதில் ஒரு சோகமான விசயம் என்னவெனில் இவருக்கு எடுத்த இரண்டு டெஸ்ட் ரிசல்ட் கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தொிவிக்கிறது.

ஆனால் இவருடைய CASE SHEET ல் இவருக்கு கொரோனா பாசிடிவ் என குறிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு ஏற்க முடியாததாக இருக்கிறது. இதே கூற்றை இவரது உறவினா்களும் முன் வைக்கின்றனா். இதனை அறிந்த பல்வேறு டிவி மீடியாக்களும் இதையே தொிவிக்கிறது.

இதையறிந்து தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநில செயலாளா் என்ற முறையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா்,மேதகு. சுகாதார செயலாளா், DME, RGGGH DEAN போன்றோாிடம் பல்வேறு போன் கால்களில் என்னால் துக்கம் தாங்காமல் கதறினேன். மேலும் சென்னையில் உள்ள சங்க நிா்வாகிகள் சுகாதார செயலாளா் போன்றோருடன் சற்று முன்னா் வரை பேச்சவாா்த்தை நடத்தினா்.

“இனிமேல் செவிலியா்கள் எப்படி தைாியமாக பணி செய்வார்கள்?” : செவிலியா் மரணத்தால் கொதிக்கும் நா்சுகள் சங்கம்!

அப்போது எங்களுடைய கோாிக்கைகள் முன்வைத்துள்ளோம். அதில், “அவருக்கு டெஸ்ட் செய்யும் முன்னரே ஏன் கொரோனா வாா்டில் அட்மிட் செய்தாா்கள் என மருத்துவமனை நிா்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.

அவருக்கு கொரோனா பாசிடிவாஅல்லது நெகடிவா என ஏன் உறுதி செய்யவில்லை.?

அவருக்கு இரண்டு டெஸ்ட் எடுத்தபோது நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளபோதும் அவரை ஏன் தீவிர சிகிச்சை பிாிவிற்கு மாற்றவில்லை.?

அவருக்கு நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளபோது மீடியா ரிப்போா்ட் படி அவருடைய CASE SHEET ல் எப்படி கொரோனா பாசிடிவ் என எழுதப்பட்டிருந்தது.?

நாங்கள் பல்வேறு முறை மருத்துவமனை முதல்வா் அவா்களிடம் பேசிய போதும் எங்களுக்கு சாியான விளக்கமளிக்க மறுத்து ஏன்?

“இனிமேல் செவிலியா்கள் எப்படி தைாியமாக பணி செய்வார்கள்?” : செவிலியா் மரணத்தால் கொதிக்கும் நா்சுகள் சங்கம்!

சென்னையில் உள்ள பொிய மருத்துவமனையில் பணிபுாியும் ஒரு செவிலிய கண்காணிப்பாளருக்கே சிகிச்சையில் இவ்வளவு அலட்சியமெனில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பணிசெய்யும் செவிலியா்களின் நிலை என்ன? இனிமேல் எப்படி செவிலியா்கள் தைாியமாக கொரோனா வாா்டு பணி செய்வா்? நிா்வாகம் எங்களுக்கு நிச்சயம் விளக்கமளிக்க வேண்டும்.

எங்களது செவிலிய கண்காணிப்பாளாின் சிகிச்சை முறைகளில் அலட்சியமாக இருந்த மருத்துவமனை முதல்வா் டாக்டா். ஜெயந்தி அவா்கள் மீது துறை ரீதியான விசாரணை செய்து தவறிழழைத்திருந்தால் உாிய நடவடிக்கை எடுக்கவேண்டி தமிழக அரசை வலியுறுத்துகிறோம். மேலும் அவருக்கு எங்களது கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.

கொரோனா பாசிடிவ் எனில் இறந்த எங்கள் செவிலிய கண்காணிப்பாளருக்கு

அவருக்கு கிடைக்கவேண்டிய அனைத்து பணப்பயன்களையும் தாமதிக்காமல் வழங்கி, இதற்கு இழப்பீடாக அவா் வாாிசுககள் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இனிவரும் காலங்களில் கொரோனா வாா்டுகளில் செவிலியா்களுக்கு பணிப்பாதுகாப்பும், மருத்துவ பாதுகாப்பும் கிடைக்க தமிழக அரசு உறுதியளிக்க வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories