தமிழ்நாடு

“10ம் வகுப்பு பொதுத்தேர்வு; கனவுகளை நசுக்கிட வேண்டாம்”: குழந்தைகள் நல ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்விகள்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து குழந்தைகள் நல செயற்பாட்டாளர் சில கருத்துக்களையும், கேள்விகளையும் முன் வைத்துள்ளனர்.

“10ம் வகுப்பு பொதுத்தேர்வு; கனவுகளை நசுக்கிட வேண்டாம்”: குழந்தைகள் நல ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்விகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கொரோனா வைரஸ் தொற்றால் தள்ளிவைக்கப்பட்டன. இதையடுத்து ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழக அரசின் இத்தைகய முடிவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்த பேரிடர் காலத்தில் தேர்வறைகளில் பல மணிநேரம் மாணவர்களையும், ஆசிரியர்களையும் வைத்து மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கி விட வேண்டாம். அதன் மூலம் கொரோனா நோய் தொற்றின் சமூகப் பரவலுக்கு தமிழக அரசே காரணமாக இருந்து விட வேண்டாம் என ஆசிரியர் சங்களே குற்றம் சாட்டியுள்ளனர்.

“10ம் வகுப்பு பொதுத்தேர்வு; கனவுகளை நசுக்கிட வேண்டாம்”: குழந்தைகள் நல ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்விகள்!

இந்நிலையில், விழியன் என்ற குழந்தைகள் நல செயற்பாட்டாளர் சில கருத்துக்களையும், கேள்விகளையும் முன்வைத்துள்ளனர். அவை பின்வருமாரு:

“அரசு என்ற இயந்திரம் நினைத்தால் நிச்சயம் எதனையும் செய்து காட்டலாம் என்பறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயுத்த அறிவிப்புகள் ஒரு நல்ல உதாரணம். மொத்தம் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 9.45 லட்சம். ஒரு வகுப்பிற்கு மொத்தம் 10 மாணவர்கள் என்றால் மொத்த தேவை 1 லட்சம் வகுப்பறைகள். ஆசிரியர்கள் மொத்த எண்ணிக்கை தோராயமாக. 1.5 லட்சம் பேர். 1 லட்சம் அறைகளை sanitize செய்ய குறைந்தது 2 நபர்கள் ஒரு பள்ளிக்கு தேவை.

மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அதுவும் வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்வார்கள் என வாக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு குறைந்து ஒரு மணி நேரம் முன்னர் வர வேண்டும். தனித்திருக்கும் உத்திரவுகள் கொடுக்க வேண்டும். கை கழுவுதல் நடைபெற வேண்டும். போதிய தண்ணீர் வசதி. அங்கும் இடைவெளி. சுத்தமான கழிப்பறைகள்.

வழக்கமான தேர்வுகளை நேரத்தைவிட குழந்தைகள் குறைந்தது 2 மணி நேரம் அதிகமாக வீட்டில் இருந்து பள்ளியில் இருக்க வேண்டும். மொத்தம் 5 மணி நேரம். இது கடுமையான வெயில்காலமும் கூட. ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் அளவுகடந்த பணிகள். பேருந்து வழித்தடத்தில் இருந்து , மேற்கூறிய பள்ளி ஏற்பாடுகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும்.

“10ம் வகுப்பு பொதுத்தேர்வு; கனவுகளை நசுக்கிட வேண்டாம்”: குழந்தைகள் நல ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்விகள்!

இவ்வளவு பெரிய workforceம் திட்டமிடலும் எப்போது தேர்வு நடந்தாலும் செய்ய வேண்டிய ஒன்று. குழந்தைகளின் பாதுகாப்பு அத்தியாவசியம்.

ஆனால் ஆனால்..

அவர்கள் என்ன மனநிலையில் இருக்கின்றார்கள்?

அவர்களின் வீட்டுச்சூழல் படிக்க ஏதுவாக தற்சமயம் இருக்குமா?

இவ்வளவு பெரிய சுமையை இந்த இக்கட்டான சூழலில் முடித்தே ஆகவேணுமா?

மேலிடத்தில் இருந்து எவ்வளவு துல்லியமான திட்டமிடல் இருந்தாலும் அது கடைக்கோடி வரை அப்படியே போகுமா?

இன்னும் தேர்வு நாட்கள் தெரியாத குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை?

மிக முக்கியமாக புதிய பாடபுத்தகம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு. எந்த வழிகாட்ட்டுதலும் இல்லை.

குழந்தைகளை முதலில் பள்ளிக்கு அழைத்து ஆசுவாசப்படுத்தி, மீண்டும் சில நாட்கள் பயிற்றுவித்து தேர்விற்கு அழைப்பதே நியாயமாக இருக்கும்.

ஆன்லைனில் கடந்த இரண்டு மாதமாக தொடர்ச்சியான பயிற்சிகளை பெறும் குழந்தைகள் ஒரு புறம்.. பசியால் இருக்கும் குழந்தைகள் மறுபுறம்.

இத்தேர்வுகளில் தோற்றுவிட்டால் இனி எத்தனை குழந்தைகளின் கல்விக்கனவுகள் பறிபோகும்.

இந்த கடுமையான சூழலில் பெண்குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் "போய் எக்ஸாம் எழுதி கிழிச்ச"

I rest my case.

கனவுகளை நசுக்கிட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories