தமிழ்நாடு

3 மணி நேரம் காத்திருந்தும் விற்க அனுமதிக்காமல் காவல்துறை அராஜகம் : ரோட்டில் காய்கறிகளை கொட்டிய விவசாயி!

காய்கறிகளை விற்கச் சென்ற விவசாயியின் வாகனத்தை பறிமுதல் செய்து காத்திருக்க வைத்ததால் விரத்தியில் விற்கச் சென்ற காய்களை விவசாயியே நடுநோட்டில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 மணி நேரம் காத்திருந்தும் விற்க அனுமதிக்காமல் காவல்துறை அராஜகம் : ரோட்டில் காய்கறிகளை கொட்டிய விவசாயி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் வெளிவராதபடி பார்த்துக்கொள்ளும் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், வாகனங்களை பறிமுதல் செய்வதும் சில இடங்களில் லத்தியால் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது.

இந்நிலையில் காலையில் காய்கறிகளை விற்கச் சென்ற விவசாயியின் வாகனத்தைப் பறிமுதல் செய்து 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததால் விரத்தியில் விற்கச் சென்ற காய்களை விவசாயியே நடுநோட்டில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 மணி நேரம் காத்திருந்தும் விற்க அனுமதிக்காமல் காவல்துறை அராஜகம் : ரோட்டில் காய்கறிகளை கொட்டிய விவசாயி!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இருசக்கரவாகனம் மூலம் காய்கறி மூட்டைகளை ஏற்றி சென்றுள்ளார். அப்போது தாரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் காவல் ஆய்வாளர் ஜெயவேல் என்பவர் அந்த விவசாயின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.

மேலும் தனித்தனியாக காய்கறிகளைக் கொண்டு செல்லாமல் மொத்தமாக எடுத்துச் செல்லலாமே என சமூக விலகலைக் கடைபிடிக்காத வகையில் விழிப்புணர்வே இல்லாதவகையில் அறிவுறை வழங்கியுள்ளார். இதனிடையே உரிய நேரத்தில் காய்களை மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்றால் வீணாகப்போய்விடும் அதனால் தன்னை அனுமதிக்குமாறு விவசாயி கேட்டுள்ளார்.

விவசாயியின் கோரிக்கையை ஏற்காமல், வாகனத்தில் இருந்து காய்கறிகளை சாலையில் வைக்கச் சொல்லி வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது மற்றொரு பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வந்ததையடுத்து ஜெயவேல் உதவி ஆய்வாளர் சுரேஷ் என்பரிடம் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

3 மணி நேரம் காத்திருந்தும் விற்க அனுமதிக்காமல் காவல்துறை அராஜகம் : ரோட்டில் காய்கறிகளை கொட்டிய விவசாயி!

உதவி ஆய்வாளர் சுரேஷ், அவர் வந்ததும் அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 3 மணிநேரம் காத்திருக்க வைத்துள்ளார். அப்போது தான் கொண்டுவந்த காய்கறிகள் அனைத்தும் வாடிப்போனது. அப்போது அந்த வழியாக டி.எஸ்.பி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தன்னை விடுவிக்காத ஆத்திரத்தில் காய்கள் வீணாய் போன விரத்தில் மூட்டைகளியில் இருந்த காய்கள் அனைத்தையும் டி.எஸ்.பி வாகன முன்பே நடுரோட்டில் வீசினார். இந்த காய்களைப்போல் என் வாழ்க்கையும் வீணாகப் போனதாக கண்ணீர் வடித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விவசாயி விட்டுவிடாத காவல்துறையினர் அவர் 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து காவல்நிலைத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ வைரலாக பரவி காவல்துறையினருக்கு கண்டனம் எழுந்தது. இதனையடுத்து விவசாயி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற்று வானத்தையும் ஒப்படைத்துள்ளனர். காவலர்களின் இந்த மோசமான சம்பவம் பலரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவசாயிக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories