தமிழ்நாடு

“மருமகள் மூலம் மாமியாருக்கு தொற்றிய கொரோனா?” - தூத்துக்குடியில் 71 வயது மூதாட்டி பலியான சோகம்! #Covid19

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். பணியின் போது பாதுகாப்புக் குறைபாடு காரணமாக அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் மூலம் அவரது மாமியார் அந்தோணியம்மாள் (71) கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. மேலும், லேப் டெக்னீசியனாக பணியாற்றும் பெண்ணின் கணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“மருமகள் மூலம் மாமியாருக்கு தொற்றிய கொரோனா?” - தூத்துக்குடியில் 71 வயது மூதாட்டி பலியான சோகம்! #Covid19

வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர்.

அதில் அந்தோணியம்மாளுக்கு நேற்று முதல் உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories