தமிழ்நாடு

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தி.மு.க ரூ.1 கோடி நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய், வழங்கப்படும் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய. மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உள்ளிட்டவையால் பெரும்பாலான மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் அவதி அடைக்கின்றனர்.

மக்களின் இந்த சூழலைப் புரிந்துக்கொண்டு தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிதியுதவி வழங்கியும் மருத்துவ உபகரணங்களுக்கும் நிதியையும் ஒதுக்கியுள்ளனர்.

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தி.மு.க ரூ.1 கோடி நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்நிலையில் தி.மு.க சார்பில், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளார்.

சென்னை அன்பழகத்தில் அதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளைஞர் அணியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories