தமிழ்நாடு

செல்லூர் ராஜூ திறந்து வைக்கும் முன்னே உடைந்த ரவுண்டானா: உள்ளே விழுந்த அ.தி.மு.கவினர்! (வீடியோ)

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட ரவுண்டானா இடிந்த விபத்தில் அ.தி.மு.கவினர் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜூ திறந்து வைக்கும் முன்னே உடைந்த ரவுண்டானா: உள்ளே விழுந்த அ.தி.மு.கவினர்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த ரவுண்டானாக்களில் மதுரையின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தொன்மை வாய்ந்த சிலைக்கள் வைக்கப்பட்டு வருகிறது.

அந்த அகையில் செல்லூர் பகுதியில், கட்டி முடிக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலைகள் வைக்கப்படவுள்ளது. இதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது. அப்போது, திறந்து வைப்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ வந்திருந்தார்.

செல்லூர் ராஜூ திறந்து வைக்கும் முன்னே உடைந்த ரவுண்டானா: உள்ளே விழுந்த அ.தி.மு.கவினர்! (வீடியோ)

அந்த சமயத்தில், அமைச்சர் செல்லூர் ராஜூ நின்றுக்கொண்டிருந்த ரவுண்டானாவில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சிக்கு வந்த அ.தி.மு.கவினர் அந்த இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிகழ்வு அப்பகுதியில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்ததற்கு சமூக ஆர்வலர்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், மக்கள் நலன் கருதி பணியாற்றாமல், எப்போது, எதில் கமிஷன் எடுக்கலாம் என்ற நோக்கில் இதுப்போன்ற பணிகளை செய்வதால் தரமற்றதாகி விடுகிறது. இதனால் மக்களுக்கே சேதம் விளைவிக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories