தமிழ்நாடு

“அ.தி.மு.க அமைச்சர்கள் ரவுடித்தனம் செய்வதில்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள்” - தி.மு.க ஆர்ப்பாட்டம்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியிலிருந்து நீக்குவதோடு, தாக்குதலுக்குக் காரணமான அவரைக் கைது செய்யவேண்டும் என தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

“அ.தி.மு.க அமைச்சர்கள் ரவுடித்தனம் செய்வதில்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள்” - தி.மு.க ஆர்ப்பாட்டம்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிவகாசியில் பத்திரிகையாளர் கார்த்தி, அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ, ஆகியோர் தலைமையில் சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர் கார்த்தி தாக்கப்பட்ட சம்பவத்திற்குக் காரணமான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து, விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கடந்த 3ந் தேதியன்று சிவகாசியில் பத்திரிகையாளர் கார்த்தியை ஆளுங்கட்சி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தூண்டுதலின்பேரில் அவருடைய ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

“அ.தி.மு.க அமைச்சர்கள் ரவுடித்தனம் செய்வதில்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள்” - தி.மு.க ஆர்ப்பாட்டம்!

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் ராஜேந்திர பாலாஜிக்குமான மனஸ்தாபங்கள் குறித்த அந்தக் கட்டுரைக்கு அவர்கள் மறுப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அவர் சுதாரிக்கவில்லை என்றால் உயிரிழக்கக் கூடிய அளவிற்கு மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் மற்ற பத்திரிகையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பது போன்று அமைந்திருக்கிறது.

அதற்கு முன்னால் நடந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டும் பாணியில் பேசுகிறார். அமைச்சராக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். ஆனால் அ.தி.மு.க அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ரவுடித்தனம் செய்வதில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

சிவகாசி மட்டுமன்றி புளியந்தோப்பு பகுதியிலும் தொடரும் அராஜகங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, “அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் தங்களை குண்டர்களாக உருமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை விதைக்க முடியும் என்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவான சக்திகளின் குரல்வளையை நெரிக்கமுடியும் என்றும் நினைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அராஜகங்களை அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டால் மக்கள் பயந்துவிடுவார்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டு இத்தகைய அராஜகங்களை அ.தி.மு.கவில் உள்ள அமைச்சர்கள் முதல் கீழே உள்ளவர்கள் வரை செய்து வருகின்றனர். அதன் ஒரு துளிதான் ராஜேந்திர பாலாஜியின் இந்த அராஜக நடவடிக்கை. அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதோடு இதன் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்ட அமைச்சரைக் கைது செய்யவேண்டும் என்பதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கை” எனத் தெரிவித்தார்.

“அ.தி.மு.க அமைச்சர்கள் ரவுடித்தனம் செய்வதில்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள்” - தி.மு.க ஆர்ப்பாட்டம்!
Admin

தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தூண்டுதலால் நடைபெற்ற பத்திரிகையாளர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தும் தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

banner

Related Stories

Related Stories