தமிழ்நாடு

தொகுதி மக்களின் நலனுக்காக மாத சம்பளத்தை அளிக்கும் தி.மு.க. MLA; வாழ்த்து மழை பொழியும் ராஜபாளையம் மக்கள்!

ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தனது மாத வருமானத்தை மக்கள் நலப்பணிக்கு வழங்கி வருவது பாராட்டை பெற்றுள்ளது.

தொகுதி மக்களின் நலனுக்காக மாத சம்பளத்தை அளிக்கும் தி.மு.க. MLA; வாழ்த்து மழை பொழியும் ராஜபாளையம் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினரான தங்கப்பாண்டியன் தனது மாத வருமானத்தை ரூ.1.05 லட்சத்தை மன வளர்ச்சிக்குன்றிய குழந்தைகள் படிக்கும் சிறப்பு பள்ளிக்கு வழங்கியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் தன்னுடைய மாத சம்பளத்தை மக்கள் நலத் திட்டங்களுக்காக தொடந்து வழங்கி வருகிறார். இதன் அடிப்படையில் தனது 43வது மாத ஊதியத்தை மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு வழங்கியுள்ளார்.

தொகுதி மக்களின் நலனுக்காக மாத சம்பளத்தை அளிக்கும் தி.மு.க. MLA; வாழ்த்து மழை பொழியும் ராஜபாளையம் மக்கள்!

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், பெரிய கடை பஜார் பகுதியில் செயல்படும் இந்த பள்ளியில் 140 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் படிப்புக்கு உதவும் கருவிகள் வாங்கவும், அவர்களது திறன் மேம்பாட்டுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் நிதி உதவி செய்துள்ளார் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல் அத்தொகுதி மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories