தமிழ்நாடு

“அவர்களை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும்” - வன்முறையைத் தூண்டும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் திமிர் பேச்சு!

மத தலைவர்களை ஓடஓட விரட்டியடிக்கப்படவேண்டிய காலம் விரைவில் வரும் என பா.ஜ.க-வின் முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

“அவர்களை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும்” - வன்முறையைத் தூண்டும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் திமிர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை சீர்குலைத்து, வன்முறையை உருவாக்க பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா கும்பல் பல்வேறு மோசமான நடவடிக்கைகளைக் கையில் எடுத்துள்ளது.

குறிப்பாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாள்முதலே பா.ஜ.க.வினர் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்பி வருகிறது பா.ஜ.க. தற்போது 45 பேர் உயிரைக் காவு வாங்கியிருக்கும் டெல்லி வன்முறைக்கு அவர்களின் வெறுப்பை விதைக்கும் பேச்சே காரணம் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அமைதியான முறையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத பா.ஜ.க தலைவர்களான எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் எச்.ராஜாவைத் தொடர்ந்து நாகர்கோவிலில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க நடத்திய பேரணியில் முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தி.முக தூண்டுதலே காரணம் என வன்மத்தோடு பேசினார். மேலும் பேசிய அவர், மற்ற மத தலைவர்களை துரோகிகள் என்றதோடு, அவர்கள் செய்த துரோகத்திற்கு விரைவில் அடித்துவிரட்டப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “நாகர்கோவில் நடைபெற்ற போலிஸார் கொலைவழக்கை எந்த மதகுருமார்களும் கண்டுகொள்ளவில்லை.

நீங்கள் செய்த துரோகத்தால் இங்கு மதரீதியான பிரச்னைகள் தொடர்கின்றன. இதனை நீங்கள் நிறுத்தவில்லை என்றால், கிறிஸ்தவ மத தலைவர்கள் ஓடஓட விரட்டி அடிக்கப்படும் காலம் விரைவில் வரும். இது நடந்தே தீரும்” எனத் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேசிய இந்த வெறுப்புணர்வு நிறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பொன்.ராதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories