தமிழ்நாடு

வறுமையால் கருமுட்டைகளை விற்கும் தமிழக பெண்கள்: “அரசு உண்மையான அக்கறை செலுத்துமா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழக பெண்கள் வறுமை காரணமாக கருமுட்டைகளை விற்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறித்து வேதனை தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

வறுமையால் கருமுட்டைகளை விற்கும் தமிழக பெண்கள்: “அரசு உண்மையான அக்கறை செலுத்துமா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டாஸ்மாக் வியாபாரத்தை ஊக்குவித்து குடும்பங்களை நிர்க்கதிக்குள்ளாக்கும் அ.தி.மு.க அரசால், உண்ண உணவின்றி பெண்கள் கருமுட்டைகளை விற்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சரிவாலும் நாடு முழுவதும் பல்வேறு தொழில்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தமிழகத்தில், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையால் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கொடிய வறுமையால், பிள்ளைகள் உண்ண உணவின்றித் தவிக்கும் நிலையில், பெண்கள் வேறு வழியின்றி கருமுட்டைகளை விற்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர். கொடும் வறுமையின் காரணமாக கருமுட்டைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் ஏழைப் பெண்கள். கருமுட்டை கொடை பெரும் வியாபாரமாக நடைபெற்று வரும் நிலையில், கருமுட்டை வழங்கும் பெண்கள் சரியான மருத்துவ ஆலோசனையின்றி, உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

இதுகுறித்துப் பேசும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது தி நியூஸ் மினிட் ஆங்கில செய்தித்தளம்.

அந்தக் கட்டுரையைச் சுட்டிக்காட்டி, பா.ஜ.க அரசாலும், டாஸ்மாக் வியாபாரத்தை ஊக்குவித்து குடும்பங்களை நிர்க்கதிக்குள்ளாக்கும் அ.தி.மு.க அரசாலும், பெண்கள் இத்தகு அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

மேலும் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “வறுமையால் சிறுநீரகத்தை விற்கும் அவலமும் தொடர்கிறது. பெண்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கி, குடும்பங்களில் வன்முறையை விதைக்கும் இந்த அவலம் எப்போது முடிவுக்கு வரும்? பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஊழல் அ.தி.மு.க அரசு இதில் உண்மையான அக்கறை செலுத்துமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories