தமிழ்நாடு

சத்தமில்லாமல் தாக்கி வரும் ‘பன்றிக்காய்ச்சல்’ : ஒரே மாதத்தில் 132 பேர் பாதிப்பு : தமிழகம் முதலிடம்!

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு மேலோங்கி வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சத்தமில்லாமல்  தாக்கி வரும்  ‘பன்றிக்காய்ச்சல்’ : ஒரே மாதத்தில் 132 பேர் பாதிப்பு : தமிழகம் முதலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 132 பேர் பாதிப்பிற்குள்ளானதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

H1N1 மற்றும் H2N3 போன்ற பல்வேறு வகையான வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சத்தமில்லாமல்  தாக்கி வரும்  ‘பன்றிக்காய்ச்சல்’ : ஒரே மாதத்தில் 132 பேர் பாதிப்பு : தமிழகம் முதலிடம்!

இந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் 132 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இருமல், சளியுடன் வரும் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சத்தமில்லாமல்  தாக்கி வரும்  ‘பன்றிக்காய்ச்சல்’ : ஒரே மாதத்தில் 132 பேர் பாதிப்பு : தமிழகம் முதலிடம்!

மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பைப் பொறுத்தவரை நடப்பாண்டில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது அடுத்தபடியாக தெலங்கானாவில் 78 பேரும், கர்நாடகாவில் 74 பேரும் டெல்லியில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 437 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories