தமிழ்நாடு

சீனாவிலிருந்து கப்பலில் வந்த பூனை... கொரோனா அபாயத்தால் அதிகாரிகள் அச்சம் - சென்னையில் பரபரப்பு!

சீனாவில் இருந்து சென்னைக்கு கப்பல் வழியாக வந்த பூனையால் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சீனாவிலிருந்து கப்பலில் வந்த பூனை... கொரோனா அபாயத்தால் அதிகாரிகள் அச்சம் - சென்னையில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா உருக்குலைந்து போயுள்ளது. இதுவரை இந்த நோய்த் தொற்று காரணமாக சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன. உலக சுகாதார மையம் சர்வதேச மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறது.

சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணித்து கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என பரிசோதித்த பிறகே அனுமதிக்கின்றனர். மேலும், கொரோனா எதிரொலியால் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரத்தும் தடைபட்டுள்ளது.

சீனாவிலிருந்து கப்பலில் வந்த பூனை... கொரோனா அபாயத்தால் அதிகாரிகள் அச்சம் - சென்னையில் பரபரப்பு!

வான்வழி, கடல்வழி என அனைத்து மார்க்கங்களிலும் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து கப்பல் வழியாக சென்னை துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர் லாரி ஒன்றில் கூண்டுக்குள் அடைபட்ட பூனை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து துறைமுக அதிகாரிகள் சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்த பிறகு, உடனடியாக விரைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் சீனாவில் இருந்து வந்த பூனையை பரிசோதித்துள்ளனர். அப்போது, அந்தப் பூனைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏதும் இல்லையென நிரூபணமானதால் சற்று ஆசுவாசம் அடைந்தனர்.

சீனாவிலிருந்து கப்பலில் வந்த பூனை... கொரோனா அபாயத்தால் அதிகாரிகள் அச்சம் - சென்னையில் பரபரப்பு!

இருப்பினும், அந்தப் பூனை வெளியே அனுமதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், பொம்மைகள் நிறைந்த கன்டெய்னரில் கூண்டுக்குள் பூனை இருந்தது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளதால் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories